தம்பிக்கு தண்ணீர் எடுக்க சென்றவர் மின்சாரம் தாக்கி உயிரிழப்பு!

கும்பகோணம் அருகே கூலி விவசாயி ஒருவர் மரம் வெட்டும் பணிக்கு சென்றபோது, மின்சாரம் தாக்கி உயிரிழந்த சம்பவம் குறித்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
 | 

தம்பிக்கு தண்ணீர் எடுக்க சென்றவர் மின்சாரம் தாக்கி உயிரிழப்பு!

கும்பகோணம் அருகே கூலி விவசாயி ஒருவர் தனது தம்பிக்கு குடிப்பதற்காக தண்ணீர் எடுக்க சென்றவர், மின்சாரம் தாக்கி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. 

கும்பகோணத்தை அடுத்த வேப்பத்துார், கல்யாணபுரம், சாலைத்தெருவை சேர்ந்தவர் குருசாமி(36). கூலி விவசாயியான இவருக்கு திருமணமாகி மனைவியும், இரண்டு குழந்தைகள் உள்ளனர். இந்நிலையில் குருசாமி, தனது தம்பி காளிதாஸ் (34) என்பவரை அழைத்து கொண்டு, பரட்டை கிராமத்தில் மரம் வெட்டும் வேலைக்காக சென்றுள்ளார்.

மரம் வெட்டி கொண்டிருந்தபோது, சகோதரர் குடிப்பதற்கு தண்ணீர் கேட்டதால், குருசாமி தண்ணீர் எடுக்க சென்றார். அப்போது, வழியில் அறுந்து கிடந்த மின் கம்பியை கவனிக்காமல் மிதித்ததில் குருசாமி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இதுகுறித்து சுவாமிமலை காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். 

newstm.in 

 

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP