இஸ்லாமிய பெண்ணின் நண்பர்களை மதம் மாற கட்டாயப்படுத்தி அடி, உதை!

இஸ்லாமிய பெண்ணின் ஆண் நண்பர்களை மதம் மாறக் கூறி அடித்து, உதைத்த இஸ்லாமியர்கள் இருவரை காவல் துறையினர் கைது செய்துள்ளனர்.
 | 

இஸ்லாமிய பெண்ணின் நண்பர்களை மதம் மாற கட்டாயப்படுத்தி அடி, உதை!

இஸ்லாமிய பெண்ணின் ஆண் நண்பர்களை மதம் மாறக் கூறி அடித்து, உதைத்த இஸ்லாமியர்கள் இருவரை காவல் துறையினர் கைது செய்துள்ளனர். 

கோவை கரும்புக்கடை, அண்ணநகர் பகுதியை சேர்ந்தவர் நிஷா 20. (பெயர் மாற்றம்). இவர் சிங்காநல்லூர் பகுதியில் உள்ள ஒரு தனியார் கல்லூரியில் இளங்கலை பட்டப்படிப்பு படித்து முடித்துள்ளார். இந்நிலையில், மாற்று சான்றிதழ் வாங்குவதற்காக கல்லூரிக்கு சென்ற நிஷா அவரது ஆண் நண்பர்கள் இருவருடன் இருசக்கர வாகனத்தில் வீடு திரும்பியுள்ளார். 

அப்போது,  நிஷாவின் வீட்டின் அருகே வாகனத்தை நிறுத்திய இருவர், இஸ்லாம் பெண் இப்படி ஆண் நண்பர்களுடன் வாகனத்தில் வருவது சரியா? தவறா? என கேள்வி எழுப்பியுள்ளனர். நிஷாவை வழிமறித்து இருவர் மிரட்டுவதை பார்த்த அவரது தாயார் அந்த இடத்திற்கு சென்றுள்ளார். 

அப்போது, ஆண் நண்பர்களுடன் வந்த குற்றத்திற்காக மகளுக்கு நூறு கசையடி வழங்க வேண்டும் என  பெல்ட்டை கழற்றி கொடுத்து இருவரும் மிரட்டியுள்ளனர். பயந்து போன அவர், நிஷாவை பெல்ட்டால் நூறு முறை அடித்ததாக கூறப்படுகிறது. இதையடுத்து அந்த இருவரும் நிஷாவையும் அவரது தாயாரையும் போக சொல்லிவிட்டு, அவரது நண்பர்களை கம்புக்கடையிலுள்ள ஒரு கடையில் அடைத்து வைத்து மதம் மாறக் கூறி அடித்து உதைத்ததாக கூறப்படுகிறது. மேலும், அவர்களின் பெற்றோர்களுக்கும் கொலை மிரட்டல் விடுத்துள்ளனர். 

பிரச்சனை வேறு திசையில் செல்வதை உணர்ந்த நிஷாவின் தாய், 2 நாட்கள் குடும்பத்துடன் தலைமறைவாக இருந்துள்ளார். இதையடுத்து பாதுகாப்பு கேட்டு கோவை மாநகர காவல் துறை கண்காணிப்பாளர் சுமித் சரணை சந்தித்து புகார் மனு அளித்துள்ளார். இந்நிலையில், காவல்துறை ஆணையரின் உத்தரவின் பேரில் வழக்கு பதிவு செய்த குனியமுத்தூர் காவல் துறையினர் ஷபியுள்ளா மற்றும் இப்ராஹிம் ஆகிய இருவரையும் கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர்.

இஸ்லாமியர்களும், இந்துக்களும் நண்பர்களாக ஒற்றுமையாக வாழ்ந்து வரும் சூழ்நிலையில் இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் அச்சத்தையும், பதற்றத்தையும் உருவாக்கியுள்ளது.

newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP