காதல் கணவர் வீட்டு முன்பு மாணவி தர்ணா போராட்டம்

சேலம் மாவட்டம் இளம்பிள்ளை அருகே கல்லூரி மாணவியை காதலித்து ஆசை வார்த்தை கூறி கர்ப்பமாக்கி ஏமாற்றிய காதல் கணவர் வீட்டு முன்பு மாணவி தர்ணா போராட்டம் மேற்கொண்டு வருகிறார்.
 | 

காதல் கணவர் வீட்டு முன்பு மாணவி தர்ணா போராட்டம்

சேலம் மாவட்டம் இளம்பிள்ளை அருகே கல்லூரி மாணவியை காதலித்து ஆசை வார்த்தை கூறி கர்ப்பமாக்கி ஏமாற்றிய காதல் கணவர்  வீட்டு முன்பு மாணவி தர்ணா போராட்டம் மேற்கொண்டு வருகிறார்.

சேலம் மாவட்டம் இளம்பிள்ளை அருகே உள்ள தப்பக்குட்டை கிராமம் கிருஷ்ணாரெட்டியூர் பகுதியை சேர்ந்த தச்சுவேலை கூலி தொழிலாளியான மாது என்பவரின் மூத்த மகள் வனிதா (19). இவர் சேலம் பத்மவாணி தனியார் கல்லூரியில் பி.எஸ்.சி மூன்றாமாண்டு படித்து வருகிறார். இந்நிலையில் அதே பகுதியை சேர்ந்த ராஜேந்திரன் என்கிற ராமசாமி மகன் தறி தொழிலாளியான துளசிமணி (29) என்பவர் கல்லூரி மாணவி வனிதாவிடம் நெருங்கிப்பழகி வந்துள்ளார்.

வனிதாவை திருமணம் செய்து கொள்வதாக ஆசை வார்த்தை கூறி வனிதா பிறந்த நாளான ஆடி 1ஆம் தேதி இனிப்பு வழங்கி துளசிமணி வீட்டில் வைத்து வலுக்கட்டாயமாக தகாத முறையில் நடந்துள்ளார். துளசிமணி, இதனை யாரிடமும்  சொல்ல வேண்டாம் என மிரட்டி அனுப்பிவிட்டார். இதனால் வனிதா 3 மாத கர்ப்பமானதை அடுத்து துளசிமணியிடம் திருமணம் செய்து கொள்ளுமாறு பலமுறை கேட்டுள்ளார். அதற்கு துளசிமணி கல்லூரிப் படிப்பை முடித்த பின்னர் திருமணம் செய்து கொள்வதாக கூறி அவரது அண்ணன் கண்ணன் மனைவி கமலி துணையுடன் கருக்கலைப்பு செய்துள்ளனர்  .

மேலும், நாளடைவில் துளசிமணி வனிதாவிடம் சரிவர பேசாததால் சந்தேகம் அடைந்த வனிதா தன் பெற்றோரிடம் தெரிவித்துள்ளார். இதனை அடுத்து பெற்றோர்கள் துளசிமணி குடும்பத்தினரிடம் திருமணம் செய்து கொள்ளுமாறு பேச்சுவார்த்தை நடத்தினர். இதில், துளசிமணி குடும்பத்தினர் மறுப்பு தெரிவித்துள்ளனர். இதனால் மகுடஞ்சாவடி காவல் நிலையத்தில் புகார் செய்தனர். புகாரை வாங்க மறுத்து மகளிர் காவல் நிலையம் செல்லும்படி கூறியுள்ளனர்.

பின்னர் 27.09. 2019 அன்று சங்ககிரி அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் வனிதா புகார் கொடுத்தார். புகாரின் பெயரில் இரு குடும்பத்தினரையும் போலீசார் அழைத்து வந்து சமரச பேச்சுவார்த்தை நடத்தி சங்ககிரி நீதிமன்ற வளாகத்தில் உள்ள விநாயகர் கோவிலில் திருமணம் செய்த, பின்னர் காவல் நிலையத்தில் வைத்து இரு குடும்பத்தினரும் வனிதா, துளசிமணி ஆகியோர் குடும்பம் நடத்த எந்தவித ஆட்சேபனையும் இல்லை என எழுத்து மூலம் எழுதி பெற்றுக்கொண்டனர்.

காதல் கணவர் வீட்டு முன்பு மாணவி தர்ணா போராட்டம்

பத்து நாட்கள் கழித்து தனி வீடு பார்த்தபிறகு அழைத்துச் செல்வதாக கூறிவிட்டு சென்ற துளசிமணி வராததால் மீண்டும் வனிதா பெற்றோர் சங்ககிரி காவல் நிலையம் சென்று முறையிட்டுள்ளனர். பின்னர் வரவழைக்கப்பட்ட துளசிமணி அதன்பின் சங்ககிரி மகளிர் காவல் நிலையத்தில் இருந்து வனிதாவை தன்னுடன் அழைத்துச் சென்று பவானியில் தனியாக வீடு எடுத்து குடும்பம் நடத்தி வந்தனர். பின்னர் வேம்படிதாளம் பகுதியில் வீடு வாடகைக்கு எடுத்து தங்க வைத்துவிட்டு சென்ற துளசிமணி, வீட்டுக்கு நீண்டநாட்களாக வராததால் சந்தேகமடைந்த வனிதா இளம்பிள்ளை அருகே உள்ள கிருஷ்ணாரெட்டியூரில் உள்ள காதல் கணவர் வீட்டுக்கு 20-ம் தேதியன்று காலை வந்துள்ளார்.

அப்போது துளசிமணியின் தாயார்  மலர்க்கொடி  மற்றும் உறவினர்கள் வனிதாவை தகாத வார்த்தையால் திட்டி மிரட்டியுள்ளனர். என் மகனுக்கு வேறு ஒரு பெண்ணை திருமணம் செய்து  வைக்கப் போகிறோம் என்று கூறி வனிதாவை கழுத்தைப் பிடித்து வெளியே தள்ளி விட்டனர். பின்னர் வனிதா தனது காதல் கணவர் வீட்டு முன்பு தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டார. இதனை அறிந்து அங்கு வந்த வனிதா  குடும்பத்தினருக்கும் துளசிமணி குடும்பத்தினருக்கும் கடும் வாக்குவாதம் ஏற்பட்டது.

காதல் கணவர் வீட்டு முன்பு மாணவி தர்ணா போராட்டம்

இதுகுறித்து தகவல் அறிந்த மகுடஞ்சாவடி காவல் நிலைய எஸ்.ஐ துரைசபாபதி மற்றும் போலீசார் நிகழ்விடம் விரைந்து வந்து இரு குடும்பத்தினரையும் காவல் நிலையம் அழைத்து விசாரணை செய்து வருகின்றனர். மேலும், பாதிக்கப்பட்ட கல்லூரி மாணவியான வனிதா கூறுகையில், ’தொடர்ந்து காவல்துறையினர் பாதிக்கப்பட்ட எனக்கு துணை நிற்கா மறுத்த வருகின்றனர். என் வாழ்க்கையை சீரழித்த காதல் கணவரை மீட்டு  என்னுடன் வாழ வைக்குமாறு’ கேட்டுக் கொண்டுள்ளார்.

மேலும் துளசிமணி வனிதாவுடன் பழகிக்கொண்டே வேறொரு பெண்ணையும் காதலித்து வந்துள்ளதாக தெரிகிறது. இதேபோன்று பல்வேறு பெண்களுடன் தொடர்பு உள்ளதாக அதிர்ச்சி தகவல் வெளியாகி உள்ளன. கல்லூரி மாணவியை கர்ப்பமாக்கி கருக்கலைப்பு செய்து ஏமாற்றிய சம்பவம் இளம்பிள்ளை பகுதியில் பெரும் அச்சத்தை ஏற்படுத்தியது. இதுபோன்ற நபர்கள் மீது முறையாக விசாரணை நடத்தி குற்றவாளிகளுக்கு தண்டனை வழங்க காவல்துறையினர் முன்வர வேண்டும் என அப்பகுதி பொதுமக்களின் கோரிக்கையாக உள்ளது.

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP