வெடிகுண்டு மிரட்டல் - மேலும் ஒருவரிடம் விசாரணை!

ஈரோடு ரயில் நிலையத்திற்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்த விவகாரத்தில் மேலும் ஒருவரிடம் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
 | 

வெடிகுண்டு மிரட்டல் - மேலும் ஒருவரிடம் விசாரணை!

ஈரோடு ரயில் நிலையத்திற்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்த விவகாரத்தில் மேலும் ஒருவரிடம் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். 

நேற்றைய தினம் சென்னை கட்டுப்பாட்டு அறையை தொடர்பு கொண்ட மர்ம நபர் ஒருவர் ஈரோடு ரயில் நிலையத்தில் வெடிகுண்டு இருப்பதாக மிரட்டல் விடுத்தார். இதையடுத்து போலீசார் ரயில் நிலையம் மற்றும் ரயில்களில் தீவிர சோதனை மேற்கொண்டனர். மேலும், மிரட்டல் விடுத்த செல்போன் எண்ணை வைத்து போலீசார் விசாரணை மேற்கொண்டனர். இதில், ஈரோடு கருங்கல் பாளையத்தைச் சேர்ந்த சிவக்குமார், லிங்கராஜ் ஆகியோரை நேற்று பிடித்து விசாரணை மேற்கொண்டனர். இந்நிலையில், இச்சம்பவம் தொடர்பாக இன்று சிறுமுகையைச் சேர்ந்த சந்தோஷ் என்பவரை அழைத்து சென்று விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். 

Newstm.in 

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP