கனிமொழிக்கு எதிரான வழக்கை நடத்த அனுமதி 

திமுக எம்.பி. கனிமொழிக்கு எதிரான தேர்தல் வழக்கை தெலங்கானா ஆளுநர் தமிழிசைக்கு பதிலாக, தூத்துக்குடி வாக்காளர் நடத்த சென்னை உயர்நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது.
 | 

கனிமொழிக்கு எதிரான வழக்கை நடத்த அனுமதி 

திமுக எம்.பி. கனிமொழிக்கு எதிரான தேர்தல் வழக்கை தெலங்கானா ஆளுநர் தமிழிசைக்கு பதிலாக, தூத்துக்குடி வாக்காளர் நடத்த சென்னை உயர்நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது.

தெலங்கானா ஆளுநர் ஆனதால், தூத்துக்குடி எம்.பி. கனிமொழி வெற்றிக்கு எதிராக தொடரப்பட்ட  வழக்கை தமிழிசை சவுந்தரராஜன் வாபஸ் பெற்றிருந்தார். இந்த நிலையில், ஸ்ரீவைகுண்டத்தை சேர்ந்த முத்து ராமலிங்கம் வழக்கை தொடர்ந்து நடத்த அனுமதி அளித்த சென்னை உயர்நீதிமன்றம், வழக்கை வாபஸ் பெற்றதால் செலவு தொகையை வழங்க தமிழிசைக்கு ஆணையிடக்கோரிய கோரிக்கையை நிராகரித்தது.

மேலும், தேர்தல் வழக்கை விரைந்து முடிக்க வேண்டியது வழக்கில் தொடர்புடையவர்களின் கடமை என்றும் நீதிபதி சுப்பிரமணியம் தெரிவித்துள்ளார்.

newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP