ஆசிய தடகள போட்டி : தங்கம் வென்ற தமிழக வீராங்கனை !

கத்தார் தலைநகர் தோஹாவில் நடைபெற்றுவரும் ஆசிய தடகளப் போட்டியில், 800 மீட்டர் ஓட்டப் பந்தயத்தில் தமிழகத்தை சேர்ந்த கோமதி மாரிமுத்து தங்கம் வென்று சாதனை படைத்தார்.
 | 

ஆசிய தடகள போட்டி : தங்கம் வென்ற தமிழக வீராங்கனை !

கத்தார் தலைநகர் தோஹாவில் நடைபெற்றுவரும் ஆசிய தடகளப் போட்டியில், 800 மீட்டர் ஓட்டப் பந்தயத்தில் தமிழகத்தை சேர்ந்த கோமதி மாரிமுத்து தங்கம் வென்று சாதனை படைத்துள்ளார். 

கத்தார் தலைநகர் தோஹாவில் 23-வது ஆசிய தடகள சாம்பியன்ஷிப் விளையாட்டுப் போட்டிகள் நடைபெற்று வருகின்றன. இதில்,  தடகளப்  போட்டியில் 800 மீட்டர் ஓட்டப் பந்தயத்தில், திருச்சியைச் சேர்ந்த கோமதி மாரிமுத்து முதலிடம் பிடித்துள்ளார். இவர் 800 மீட்டர் பந்தய இலக்கை 2.02.7 நிமிடங்களில் கடந்து தங்கம் வென்று இந்தியாவிற்கு பெருமை சேர்த்துள்ளார். 

இதன்மூலம், ஆசிய தடகளப் போட்டியில் இந்தியா முதல் தங்க பதக்கத்தை கைப்பற்றியுள்ளது. முன்னதாக, இந்தியா இந்த போட்டியில் 2 வெள்ளி மற்றும் 3 வெண்கல பதக்கங்களை வென்றுள்ளது. 

newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP