கொழுப்பெடுத்து கொசத்தியிடம் போனால் கொளுத்தி விடுவாள்

சென்டினல் பழங்குடியினர் பாதுகாக்கப்பட்ட தீவை நவீன உலகத்தோடு இணைக்க முயற்சிப்பதாக அங்கு செல்வது தேவையற்றது. அவர்களுக்கு அது எங்கே தங்கள் தீவு பறிபோகிறதோ என்ற பயம் தான் எதிரொலிக்கும். இதைத் தான் ஆலன் கொலை நமக்கு உணர்த்துகிறது.
 | 

கொழுப்பெடுத்து கொசத்தியிடம் போனால் கொளுத்தி விடுவாள்

கொழுப்பெடுத்து கொசத்தியிடம் போனால் கொளுத்திவிடுவாள் கொளுத்தி என்று ஒரு பழமொழி உண்டு.

பானை, சிற்பம் செய்பவன் ஒருவனின் மனைவி மிக அழகாக இருப்பாள். அவர் வீட்டை கடந்து செல்லும் படை வீரன் முதல் மன்னர் வரை அவளை அணுகி சாம, தான, பேத, தண்டனை என்று அனைத்து விதமான நிலைப்பாடுகளை பயன்படுத்தி அவளை உடலுறவுக்கு அழைப்பார்கள்.

அதிர்ச்சியடைந்த அவள் நடந்ததை எல்லாம் கணவரிடம் சொல்லுவாள். அவனோ பக்கத்து ஊர் திருவிழா வரும் வரை சமாளி என்று சொல்லுவான். அதன்படி திருவிழாவும் நெருங்கி விட்டது. கணவன் இன்று மாலை 6 மணி முதல் ஒரு மணி நேரம் இடைவெளி விட்டு ஒவ்வொருவனாக வரச் சொல் என்று யோசனை ஒன்றை கூறிவிட்டு செல்வான்.

கொழுப்பெடுத்து கொசத்தியிடம் போனால் கொளுத்தி விடுவாள்

அதன்படி படைவீரனை 6 மணிக்கும், தளபதியை 7 மணிக்கும், அமைச்சரை 8 மணிக்கும் மன்னனை 9 மணிக்கும் வரச் சொல்லுவாள் ஒருவரை வரச்சொன்னது மற்றவருக்கு தெரியாது.

குறிப்பிட்ட நாளின் 6 மணிக்கு படைவீரன் வருவான், தன்னை அலங்கரித்து காத்திருந்த கொசத்தியை கட்டித் தழுவுவான். இருங்க தோசை சுட்டு சாப்பிட்டு விட்டு சந்தோசமா இருக்கலாம் என்று சொல்லிவிட்டு கொசத்தி அடுக்களையில் நுழைந்து நேரத்தை போக்குவாள். மணி 7 ஆகிவிடும் படைத்தளபதி கதவை தட்டவே அதிர்ச்சியடைந்த படை வீரரன் கொசத்தியை பார்த்து மறைவிடம் கேட்டு கெஞ்சுவான். அவள் படைவீரர் மீது களிமண்ணை பூசி கரடி பொம்மை ஒன்றை செய்துவிட்டு, கதவை திறந்து தளபதியை உள்ளே அழைப்பாள், அவருக்கு போக்கு காட்டிய கொசத்தி மீண்டும் கதவு தட்டும் ஓசை கேட்ட போது அமைச்சர் வந்த தகவல் அறிந்த படைதளபதி அதிர்ச்சியடைந்து கெஞ்சுவான் அடுத்து ஒரு யானை பொம்பை தயார். இப்படியே மன்னர்வரை ஆளுக்கு ஓரு பொம்ம்மையாக உருவாகிவிடுவார்கள். பின்னர் குயவன் வருவான். அவன் மனைவியை பார்த்து இன்னும் இந்த .பொம்மைகளை சுட வில்லையா. காலையில இவற்றை வாங்க வந்து விடுவார்கள் என்று கூறி,பொம்மைகள் மீது வைக்கோல் போட்டு கொளுத்தி விடுவான். இதைத்தான் கொழுப்பெடுத்து கொசத்தியிடம் போனால் கொளுத்தி விடுவாள் கொளுத்தி என்பார்கள் .

இப்படிதான் சமீபத்தில் ஜான் ஆலவன் சாவ் பழங்குடியினத்தவர்களால் கொல்லப்பட்டதும்.

பழங்குடியினத்தவர்கள் எதுவும் தெரியாதவர்கள் என்ற எண்ணம், கிறிஸ்தவ, இஸ்லாமியர்களுக்கு மிகவும் அதிகம். இதனால் தான் கிறிஸ்தவர்கள் அவர்களிடம் பிரச்சாரம் செய்கிறேன் என்ற போர்வையில் போய் இறங்குகிறார்கள்.

கொழுப்பெடுத்து கொசத்தியிடம் போனால் கொளுத்தி விடுவாள்

ஆங்கிலத்தில் சிறப்பான கதை ஒன்று உள்ளது. பழங்குடியினத்தவர்கள் மட்டும் வாழும் ஒரு தீவில் பாதிரியார் போய் இறங்குகிறார். அவர்கள் வடக்கு சென்டினல் தீவுவாசிகள் போல அவ்வளவு மோசமானவர்கள் அல்ல. பாதிரியாரை வரவேற்கிறார்கள். அவர் நீங்கள் எப்படி இறைவனை வழிபடுவீர்கள் என்று கேட்கிறார். உடனே அவர்கள் தங்கள் முறையை விளக்குகிறார்கள். அதைக் கேட்ட பாதிரியார் இது தப்பு நான் சொல்லித் தரும் முறையை கடைபிடியுங்கள், என்று பரம மண்டலங்களில் இருக்கும் எங்கள் பிதாவே தொடங்கி ஆமேன் என்று சொல்லிக் கொடுக்கிறார். பழங்குடியினர் பாதிரியாரை மகிழ்ச்சியுடன் படகில் வழி அனுப்புகிறார்கள். கடலிலில் கண்ணுக்கு எட்டும் துாரத்திற்கு படகு சென்ற நிலையில் ஒருவன் கடல் மீது ஐயா ஐயா என்று சொன்னபடியே படகை நோக்கி ஓடிவருகிறான். பாதிரியார் ஏசுதானே கடலில் நடந்து வந்தார். இப்போது வருவது ஏசுவா என்ற ஐயத்தில் படகை மெதுவாக ஓட்டப் பணிக்கிறார். ஆனால் வந்தது அவர் சென்ற தீவில் வசிக்கும் பழங்குடியின வீரன். அவன் ஐயா நீங்கள் சொல்லிக் கொடுத்த வழிபாட்டு முறை மறந்துவிட்டது, தயவு செய்து எழுதிக் கொடுங்கள் என்கிறான். அதிர்ச்சியடைந்த பாதிரியார், இல்லை இல்லை நீங்கள் எப்படி வழிபடுகிறீர்களோ அப்படியே தொடருங்கள் என்று ஆசி வழங்கி செல்கிறார். 

இப்படித்தான் பழங்குடியினர் வாழ்கிறார்கள். அவர்கள் தங்களுக்கு ஏற்ற வாழ்க்கை முறையை வடிவமைத்து வாழ்கிறார்கள். அது நமக்கு புரியவில்லை என்றால் அவர்கள் முட்டாள்கள் என்று அர்த்தம் அல்ல. அவர்களுக்கு நாம் எதையும் கற்றுக் கொடுக்க வேண்டியது இல்லை.

ஆனால் இங்கு செல்லும் பாதிரியார்கள் வெறும் பிரச்சாரத்திற்கு மட்டும் சென்றால் பரவாயில்லை. அது மட்டும் நோக்கம் இல்லை. செவ்விந்தியர்கள் பலர் கடற்கரையில் அமர்ந்து இருந்தனர். அங்கு வந்த படகில் ஒரு சில பாதிரியார்கள் இருந்தனர். அவர்கள் படகில் இருந்து இறங்கி செவ்விந்தியர்களை பார்த்து கண்களை மூடுங்கள் நாம் கர்த்தரை நோக்கி ஜெபிக்கப் போகிறோம் என்று கூறினர். அவர்களும் நம்பி கண்களை மூடினர் ஜெபித்துவிட்டு கண்களை திறந்தனர். அப்போது அவர்கள் கையில் பைபிள் இருந்தது, பாதிரியார்கள் கையில் நாடு இருந்தது என்று வேடிக்கையாக கூறுவார்கள்.

கொழுப்பெடுத்து கொசத்தியிடம் போனால் கொளுத்தி விடுவாள்

இது போன்ற அச்சத்தில் தான் வடக்கு செனடினல் தீவுக்குள் நுழைய முயன்ற கிறிஸ்தவ மத போதகர் ஜான் ஆலன் சாவ் கொல்லப்பட்டதும்.

சென்டினல் பழங்குடியினர் பாதுகாக்கப்பட்ட தீவில் உலகத் தொடர்பு இல்லாமல் வசிக்கிறார்கள். இவர்கள் எண்ணிக்கை வெறும் 40 தான் என்றாலும் அவ்வாறு வாழ அவர்களுக்கு உரிமை இருக்கிறது. ஆனால் அவர்கள் ஏதோ நாகரீகம் தெரியாதவர்கள் அவர்களை நவீன உலகத்தோடு இணைக்க முயற்சிப்பதாக அங்கு செல்வது தேவையற்றது. அவர்களுக்கு அது எங்கே தங்கள் தீவு பறிபோகிறதோ என்ற பயம் தான் எதிரொலிக்கும். இதைத் தான் ஆலன் கொலை நமக்கு உணர்த்துகிறது.

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP