வடமாநிலங்களில் தீபாவளி (தொடர்ச்சி)

மூன்றாவது நாளான அமாவாசையன்று அவர்கள் பெரிய தீபாவளி கொண்டாடுகிறார்கள். தங்கள் வீட்டுக்கு வந்த, மகாலட்சுமிக்கு, மாலையில் சிறப்பு பூஜை, வழிபாடுகள் செய்கிறார்கள். மேற்கு வங்கம், ஒடிசா, அசாம் போன்ற மாநிலங்களில் காளி தேவிக்குச் சிறப்பு பூஜைகள் நடைபெறுகின்றன.
 | 

வடமாநிலங்களில் தீபாவளி (தொடர்ச்சி)

வடமாநிலங்களில், தீபாவளியை ஐந்து நாட்கள் கொண்டாடுகின்றனர். முதல் இரண்டு நாட்கள் நடக்கும் விழாக்கள் பற்றி  நேற்று பார்த்தோம். மற்ற மூன்று நாட்கள் விழா பற்றி இன்று பார்ப்போம். 

பெரிய தீபாவளி
மூன்றாவது நாளான அமாவாசையன்று அவர்கள் பெரிய தீபாவளி கொண்டாடுகிறார்கள். தங்கள் வீட்டுக்கு வந்த, மகாலட்சுமிக்கு, மாலையில் சிறப்பு பூஜை, வழிபாடுகள் செய்கிறார்கள். மேற்கு வங்கம், ஒடிசா, அசாம் போன்ற மாநிலங்களில் காளி தேவிக்குச் சிறப்பு பூஜைகள் நடைபெறுகின்றன.

கோவர்த்தன பூஜை 
நான்காவது நாள் பண்டிகை, ஒவ்வொரு மாநிலத்திலும் ஒவ்வொரு விதமாகக் கொண்டாடப்படுகிறது. பொதுவாக, கோவர்த்தனகிரியைக் குடையாகப் பிடித்து வருணன் மற்றும் இந்திரனின் செருக்கை அடக்கிய கிருஷ்ணரைப் போற்றும் வகையில்,கோவர்த்தன பூஜை கொண்டாடப்படுகிறது. 
சில மாநிலங்களில், மகாவிஷ்ணு வாமனராக வந்து மகாபலிச் சக்கரவர்த்தியை வெற்றிகொண்ட தினமாகவும் கொண்டாடப்படுகிறது. 

இன்னும் சில மாநிலங்களில் ராவணனை சம்ஹாரம் செய்து ராமர் அயோத்திக்குத் திரும்பிய நாளாகவும் கொண்டாடுகிறார்கள். அன்றைய தினம் ராமபிரானுக்குச் சிறப்பு வழிபாடுகள் செய்கிறார்கள். 

குஜராத்தில் இந்த நாளைத்தான் புத்தாண்டாகக் கொண்டாடுகிறார்கள். வியாபார நிறுவனங்களில், இன்றுதான் புதுக் கணக்குத் தொடங்குகிறார்கள்.

பய்யா தோஜ்
ஐந்நாவது நாளை, பய்யா தோஜ்  என .கொண்டாடுகின்றனர். அனைத்து வீடுகளிலும் `சகோதரிகளைக் கொண்டாடும் நாள்’ இது. நாம் பொங்கல் சீர், கொடுப்பதைப் போன்றே, அங்கு சகோதரர்கள் தங்கள் சகோதரிகளுக்குப் பரிசு கொடுத்து அசத்துவார்கள்.  சகோதர சகோதரிகளுக்கு இடையே அன்பை வளர்க்கும் நாளாக கொண்டாடப்படுகிறது. 

newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP