ஐந்து நாள்  கொண்டாடப்படும் தீபாவளி!

தீபாவளி என்பது, தமிழ்நாட்டில், ஒருநாள் கொண்டாட்டம்தான். ஆனால், வட மாநிலங்களில் தீபாவளிப் பண்டிகை, ஐந்து நாட்கள் கொண்டாடப்படுகிறது. இந்த ஐந்துநாள் கொண்டாட்டத்தில், இரண்டு நாட்கள் தீபாவளி என்ற பெயரில் சின்ன தீபாவளி என்றும், பெரிய தீபாவளி என்றும் கொண்டாடுகிறார்கள்.
 | 

தமிழகத்தில் நாம் தீபாவளி கொண்டாடும் நாளில் அவர்கள் சின்ன தீபாவளி கொண்டாடுகிறார்கள். `நரக சதுர்த்தசி' என்று அழைக்கப்படும் அன்றுதான், பகவான் கிருஷ்ணர், நரகாசுரனை சம்ஹாரம் செய்தார். அவன் பகவான் கிருஷ்ணரிடம் கேட்டுக்கொண்டபடி, அன்றைய தினம் பட்டாசு வெடித்துக் கொண்டாடுகிறார்கள். மறுநாள் அமாவாசையன்று பெரிய தீபாவளி கொண்டாடப்படுகிறது.

வட மாநிலங்களில் இருப்பவர்களின் தீபாவளிப் பண்டிகை, ஐந்து நாட்கள் எப்படிக் கொண்டாடப்படுகிறது என்பதைப் பார்ப்போம். 

முதல்நாள்:  தந்தேரஸ் எனப்படும் உலோகத் திருவிழா

இரண்டாவது நாள்: சின்ன தீபாவளி என்னும் நரகசதுர்த்தசி

மூன்றாவது நாள்: பெரிய தீபாவளி

நான்காவது நாள்: மில்னி எனப்படும் கோவர்த்தன பூஜை

ஐந்தாவது நாள்: பையா தோஜ் எனப்படும் சகோதரிகளைக் கொண்டாடும் திருவிழா.

இதை எப்படி கொண்டாடுகிறார்கள் என்பதை நாளை பார்க்கலாம்.
 
newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP