Logo

படிந்தது எஸ்ஸார் ஸ்டீல்!- 54,390 கோடி கடனை செலுத்துவதாக அறிவிப்பு

காங்கிரஸ் ஆட்சி காலத்தில் வங்கிகளிடம் பெற்ற ரூ. 54,390 கோடி என்ற பெருங்கடன் தொகையை மோடி அரசின் சட்ட நடவடிக்கைகளுக்குப் திருப்பி செலுத்தத் தயார் என்று எஸ்ஸார் ஸ்டீல் நிறுவனம் கூறி அடிப்பணிந்துள்ளது.
 | 

படிந்தது எஸ்ஸார் ஸ்டீல்!- 54,390 கோடி கடனை செலுத்துவதாக அறிவிப்பு

காங்கிரஸ் ஆட்சி காலத்தில் வங்கிகளிடம் பெற்ற ரூ. 54,390 கோடி என்ற பெருங்கடன் தொகையை மோடி அரசின் சட்ட நடவடிக்கைகளுக்கு திருப்பி செலுத்தத் தயார் என்று எஸ்ஸார் ஸ்டீல் நிறுவனம் தெரிவித்துள்ளது. 

கடந்த ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சிக் காலத்தில் அளிக்கப்பட பெருவாரியான கடன் தொகைகள் மிகபெரும் நிறுவனங்களால் திருப்பி செலுத்தப்படாமல் வாராக் கடன் பட்டியலில் இடம்பெற்று நாட்டையே அதல பாதாளத்துக்கு இட்டுச் சென்றது. 2013 ஆம் ஆண்டு வாராக் கடன் முதலாளிகளின் பெயர்களையும் அவர்களது நிறுவனங்கள் பட்டியலையும் பகிரங்கமாக அறிவிக்க உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது. இருப்பினும் அப்போதையை ஆட்சியாளர்கள் அதனை மதிக்கவில்லை. மாறா*க மறைமுகமாகவும் வாராக்கடன்களை அதிகரித்துக் கொண்டே சென்றனர். 

அந்தவகையில் எஸ்ஸார் ஸ்டீல் நிறுவனத்துக்கும் காங்கிரஸ் ஆட்சிக் காலத்தில் பெருங்கடன் வழக்கப்பட்டுள்ளது. இதனை திருப்பி செலுத்தாமல் அதன் பங்குதாரர்கள் இழுத்தடிப்பு வேலைகளை செய்து வந்தனர்.  ஆனால் பாஜக தலைமையிலான மோடி அரசு பதவியேற்றதும் கறுப்புப் பணத்தை மீட்பதிலும் வாராக் கடன்களை வசூலிப்பதிலும் மிகத் தீவிரமாக செயல்பட்டது.

அந்த வகையில், வாராக் கடன் பட்டியலில் முதலிடத்தில் உள்ள நிறுவனம் தான் எஸ்ஸார் ஸ்டீல்.  இதனால் இந்த நிறுவனத்தின் விற்பனை மீதும் தடை விதிக்கப்பட்டு பின்னர் இடைக்கால தடை நீக்கம் செய்யப்பட்டது. 

விஜய் மல்லையா விவகாரத்தில் கடன் வாங்கி தப்பியோடிய நடவடிக்கை காரணத்தை ஆராய்ந்த மத்திய மோடி அரசு, இம்மாதிரியான மோசடிகளை மறைக்க  சம்பந்தப்பட்டவர்கள் நீதிமன்றம் செல்வதை தடுக்க NCLT (தேசிய நிறுவன சட்ட தீர்ப்பாயம் ) 2016ஆம் ஆண்டு அமைக்கப்பட்டது.  தொடர்ந்து வங்கி ஒழுங்குமுறை சட்ட திருத்த மசோதாவும் [Banking Regulation (Amendment) Bill] கொண்டுவரப்பட்டது. இந்த சட்ட திருத்த மசோதா மூலம் வங்கிகள் தங்களது வாராக்கடன் பிரச்னைக்கு தாங்களாகவே முடிவெடுக்கும் அதிகாரம் கிடைத்தது. 

இந்த புதிய சட்டத் திருத்தத்தின்படி குறிப்பிட்ட வாரக்கடன் சொத்துகள் மீது சம்பந்தப்பட்ட வங்கிகளே முடிவெடுக்க ரிசர்வ் வங்கி அதிகாரம் அளிக்கும். எனினும் ரிசர்வ் வங்கிக்கு அனைத்து வழிகாட்டு அதிகாரங்களும் , கட்டுப்பாடு அதிகாரங்களும் இருக்கும். நியமனம் மற்றும் நியமனங்களுக்கான ஒப்புதல், வங்கிகளின் வாராக்கடன் தீர்வுகளுக்கு வங்கிகளுக்கு ஆலோசனையைத் தொடர்ந்து அளிக்கும் வழிமுறை பின்பற்றப்பட்டது. 

இந்த இரண்டு சட்டத்திருத்தங்களும் தான் காங்கிரஸ் ஆட்சி காலத்தில் வளர்ந்த நிதி மோசடி முதலாளிகள் வெளிவர காரணமாக அமைந்தது. 

கடனை அடையுங்கள்....இல்லை, கம்பெனியை வங்கியிடம் ஒப்படைத்து விடுங்கள்!

இந்த சட்டத திருத்தத்துக்கு பிறகு, வாங்கிய கடனை அடையுங்கள் அல்லது நிறுவனத்தை ஒப்படையுங்கள் என வங்கிகள் நெருக்கடி அளித்தன. அந்த வகையில், எஸ்ஸார் ஸ்டீல் நிறுவனம் கடனைத் திரும்ப செலுத்த முடியாத திவாலான நிறுவனமாக அறிவிக்கப்பட்டது. பின்னர் எஸ்ஸார் ஸ்டீல் நிறுவனத்தை ஆர்செல்லார் மிட்டல்  (ArcelorMittal) நிறுவனம் கையகப்படுத்தும் சூழல் உருவானது. 

இந்த நிலையில் எஸ்ஸார் ஸ்டீல் நிறுவன உரிமையாளர்கள் கடன்த் தொகையை முழுமையாக திரும்பத் தர தயாராக இருப்பதாக தெரிவித்துள்ளனர். பல்வேறு முறைகளில் பெறப்பட்ட கடன்களை முழுவதுமாக செலுத்துவதாக நிறுவனத்தின் இயக்குனர் பிரஷாந்த் ரூயா தெரிவித்துள்ளார். 

வாராக் கடன் பட்டியலில் முதலிடத்தில் இருந்த எஸ்ஸார் ஸ்டீல் நிறுவனம் மத்திய அரசின் திவால் சட்டத்துக்கு அடிப் பணிந்து இருப்பது தான் மோடி ஆட்சியின் மற்றொரு வெற்றி. திவால் சட்டம் மூலம் காங்கிரஸ் ஆட்சியில் மோசடி நிறுவனங்களுக்கு அளிக்கப்பட கடன் தொகை வெகுவிரைவாக மீட்கப்பட அதிக வாய்ப்பு ஏற்பட்டுள்ளது. 

Newstm.in 

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP