பல மணி நேரங்களாக வேலை செய்யாத வாட்ஸ் ஆப்! 150 கோடி பயனாளர்கள் பாதிப்பு...

நேற்று இங்கிலாந்து, நைஜீரியா உள்ளிட்ட பகுதிகளில் பல மணி நேரங்களாக வாட்ஸ் ஆப் இயங்காததால் சுமார் 150 கோடி மக்கள் பாதிக்கப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. ஆனால், இதுகுறித்து நிறுவனத்தின் தரப்பில் இருந்த எந்தவிதமான தகவலும் தெரிவிக்கப்படவில்லை.
 | 

பல மணி நேரங்களாக வேலை செய்யாத வாட்ஸ் ஆப்! 150 கோடி பயனாளர்கள் பாதிப்பு...

நேற்று இங்கிலாந்து, நைஜீரியா உள்ளிட்ட பகுதிகளில் பல மணி நேரங்களாக வாட்ஸ் ஆப் இயங்காததால் சுமார் 150 கோடி மக்கள் பாதிக்கப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. 

உலகம் முழுவதும் பயன்படுத்தப்படும் பிரபல தகவல் தொடர்பு செயலியான 'வாட்ஸ்ஆப்' இங்கிலாந்து உள்ளிட்ட ஒரு சில வெளிநாடுகளில் வேலை செய்யவில்லை. இது தொடர்பாக ட்விட்டரில் பலர் தங்களது ஆதங்கத்தை வெளிப்படுத்தியுள்ளனர். 

 

அந்த பதிவுகளின் அடிப்படையில் நேற்று காலை முதல் வாட்ஸ் அப் இயங்கவில்லை என தெரியவந்துள்ளது. முக்கியமாக இங்கிலாந்து நைஜீரியாவைச் சேர்ந்தவர்கள் இந்த பதிவுகளை இட்டுள்ளனர்.

வாட்ஸ் ஆப் சரியாக இயங்காததால் சுமார் (1.5 பில்லியன்)150 கோடி பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக கணக்கிடப்பட்டுள்ளது. ஆண்ட்ராய்டு மட்டுமல்லாமல் ஐஓஎஸ்(ios) தளங்களிலும் வாட்ஸ் ஆப் இயங்கவில்லை. ஆனால், இதுகுறித்து நிறுவனத்தின் தரப்பில் இருந்த  எந்தவிதமான தகவலும் தெரிவிக்கப்படவில்லை. 

newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP