Logo

இன்ஸ்டாகிராம் பவர் கட்... நெட்டிசன்கள் புலம்பல்!

பிரபல சமூக வலைத்தளமான இன்ஸ்டாகிராம், பல்வேறு நாடுகளில் இன்று திடீரென தற்காலிகமாக தடைபட்டது. சுமார் 1 மணி நேரம் நீடித்த இந்த தடையால், இன்ஸ்டாகிராம் வாடிக்கையாளர்கள் மற்ற சமூக வலைத்தளங்களில் புலம்பித் தள்ளினர்.
 | 

இன்ஸ்டாகிராம் பவர் கட்... நெட்டிசன்கள் புலம்பல்!

பிரபல சமூக வலைத்தளமான இன்ஸ்டாகிராம், பல்வேறு நாடுகளில் இன்று திடீரென தற்காலிகமாக தடைபட்டது. சுமார் 1 மணி நேரம் நீடித்த இந்த தடையால், இன்ஸ்டாகிராம் வாடிக்கையாளர்கள் மற்ற சமூக வலைத்தளங்களில் புலம்பித் தள்ளினர்.

புகைப்பட பகிர்வு இணையதளமான இன்ஸ்டாகிராம், கடந்த சில ஆண்டுகளில் நம்பர் ஒன் சமூக வலைத்தளமாக மாறியுள்ளது. சராசரியாக ஒரு மாதத்தில் மட்டும் சுமார் 100 கோடி வாடிக்கையாளர்கள் இன்ஸ்டாகிராமை பயன்படுத்தி வருகின்றனர். இன்ஸ்டாகிராமின் நிறுவனர்களான கெவின் சிஸ்டராம் மற்றும் மைக் க்ரீகர் ஆகியோர் கடந்த மாதம் தங்கள் பதவியை ராஜினாமா செய்ததாக திடீரென அறிவித்தனர். இதைத் தொடர்ந்து, ஆடம் மொஸேரி புதிய இன்ஸ்டாகிராம் தலைவராக நேற்று தான் நியமிக்கப்பட்டார். 

இந்நிலையில் இன்று திடீரென, இன்ஸ்டாகிராம் செயலிழந்தது. ஆப் மற்றும் இணையத்தளம் மூலம் இன்ஸ்டாகிராமை பயன்படுத்த முயற்சி செய்த கோடிக்கணக்கான வாடிக்கையாளர்கள், இன்ஸ்டாகிராம் செயலிழந்து கிடப்பதாக தெரிவித்தனர். இதுகுறித்து இன்ஸ்டாகிராமின் தாய் நிறுவனமான பேஸ்புக், எதுவும் கூற மறுத்துவிட்டது. சுமார் ஒரு மணிநேரம் நீடித்த இந்த தடையால், வாடிக்கையாளர்கள், #Instagramdown என்ற ஹேஷ்டேக்கை உருவாக்கி, இன்ஸ்டாகிராமையும், பேஸ்புக்கையும் சமூக வலைத்தளங்களில் வறுத்தெடுத்து வந்தனர். தற்போது மீண்டும் இன்ஸ்டாகிராம் வாடிக்கையாளர்களின் பயன்பாட்டுக்கு திரும்பியுள்ளது. 

2010ம் ஆண்டு துவக்கப்பட்ட இன்ஸ்டாகிராம் சமூக வலைதளத்தை, 2012ம் ஆண்டு சுமார் 7300 கோடி ரூபாய் கொடுத்து பேஸ்புக் வாங்கியது குறிப்பிடத்தக்கது. சமீபத்தில் தகவல் திருட்டு உள்ளிட்ட பல சர்ச்சைகளை பேஸ்புக் நிறுவனம் சந்தித்து வரும் நிலையில், இன்ஸ்டாகிராம் செயலிழந்தது பல்வேறு கேள்விகளை எழுப்பியுள்ளது. 

newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP