பொருளாதாரத்தில் தோல்வி அடைந்துவிட்டதா மோடி அரசு?

வளர்ச்சி என்பது உடல் முழுமையாக இருக்க வேண்டும். அது ஒரு பக்கம் மட்டும் இருந்தால் வீக்கம் என்று தான் சொல்லுவார்கள். அதே போல எது வளர்கிறது என்றும் கவனிக்க வேண்டும். உதியன் பெருத்தால் உத்திரத்துக்கு கூட ஆகாது என்பார்கள். அதைப் போன்ற வளர்ச்சி பெற்றாலும் பலன் இல்லை.
 | 

பொருளாதாரத்தில் தோல்வி அடைந்துவிட்டதா மோடி அரசு?

எழுதப்படிக்க தெரியாதவர்களை, ஏற்ற இறக்கத்துடன் பேசினாலே ஏமாற்றிவிடலாம். படித்தவர்களை அப்படி எல்லாம் செய்ய முடியாது. அவர்கள் படித்த படிப்பிற்கு தகுந்தபடி, புள்ளி விபரங்களை அள்ளிவீச வேண்டும். அப்போதுதான் சரியாக  புரிந்து கொண்டது போல ஏமாறுவார்கள். அதே நேரத்தில், புள்ளிவிபரங்களைக் கொண்டு தங்கள் கருத்தை எப்படி வேண்டுமானாலும் திரித்துக் கூறலாம்.

அப்படித்தான், கடந்த சில மாதங்களாக 'இந்திய பொருளாதாரம் தேங்கிவிட்டது. பலர் வேலை இழந்து விட்டார்கள். மோட்டார் வாகன துறை சங்குதான். இப்போது பரவாயில்லை. இன்னும் சில மாதங்கள் கழித்து இதை விட மோசமாக பொருளாதாரம் பாதிக்கப்படும். அப்போது இந்தியர்கள் யாரும் வாழவே முடியாது. பார்த்தீங்களா? மோடி அரசு வீழ்ச்சி அடைந்துவிட்டது. பொருளாதார சரிவை இந்த அரசு ஒத்துக் கொள்வவே இல்லை' என்றெல்லாம் கூச்சல் எழுகிறது.

இவர்களின் ஒரே ஆதாரம் ஜிடிபி. கடந்த காலாண்டில் 5 சதவீதம் தான் தான் வளர்ச்சியடைந்துள்ளது. உற்பத்தி துறையின் முடக்கம் தான் இதற்கு காரணம். ஐயோ பாவம் மக்கள் என்று வருத்தப்படுகிறார்கள். மாணவர்களே காலாண்டு தேர்வு பற்றி கவலைப் படாத நிலையில், இந்த பொருளதாரப் புலிகள் கவலைப்படுவது நாட்டிற்காக அல்ல, ஓட்டுக்காதத்தான்.

ஊட்டி, குற்றாலம் போன்ற சுற்றுலாத்தலங்களில் ஆண்டிற்கு 3 மாதம் தான் சீசன். ஆனால் ஆண்டு முழுவதும் கடை இருக்கும். வியாபாரம் இருக்கவே இருக்காது. அதற்காக யாரும் கடையை மூடி விட்டு செல்வதில்லை. அதே நேரத்தில் சீசனில் நடக்கும் விற்பனை மற்ற காலத்தில் ஏற்பட்ட நஷ்டத்தை ஈடு செய்து விடும்.

நாட்டின் வர்த்தக உலகமும் இப்படிதான். ஆகஸ்ட் மாதம் தொடங்கி ஜனவரி வரை பண்டிகை காலம். இந்த 4 மாதங்களில் நடைபெறும் விற்பனையும், இதர காலங்களில் நடைபெறும் மொத்த விற்பனையும் ஒன்று. இப்படிபட்ட சூழ்நிலையில் கடந்த காலாண்டு ஜிடிபியை வைத்து பொருளாதாரத்தை கணக்கிடுகிறோம்.

ஜிடிபி மட்டும் பொருளாதார பிரச்னையை அடையாளம் காட்டி விடாது. அதுடன் இணைந்து பண வீக்கம். நீரிழிவு நோயும், ரத்த கொதிப்பும் போல வைத்துக் கொள்ளலாம்.

உற்பத்தி துறை முடங்கிவிட்டது. பலர் வேலை இழந்து விட்டார்கள் என்றால், அதற்கு இணையாக விலைவாசி உயர வேண்டும். ஆனால் அவ்வாறு உயரவில்லை என்பது சிவப்பு,கருப்பு, கருப்பு சிவப்பு என்று இல்லாமல் வெள்ளை உள்ளம் கொண்டவர்களுக்கு நன்கு விளங்கும்.

வாகன உற்பத்தி முடங்கி இருப்பது பொருளாதாரத்தின் வீழ்ச்சியாக பார்க்கிறார். வாகனங்கள் வளமையின் அடையாளம் இல்லை. பெரும்பாலானவர்களுக்கு ஆடம்பரத்தின் குறியீடாகத்தான் அது இருக்கிறது. அதிலும் இஎம்ஐ முறை இல்லாவிட்டால் இந்த நிறுவனங்கள் ஈ ஓட்டிக் கொண்டு தான் இருக்க வேண்டும். குறைந்தது 3 லட்சம் ரூபாய் இருந்தால் தான் கார் வாங்க முடியும். அதிகபட்டச விலை கோடிகளில் உள்ளது.

இன்னொரு புறம் பிரிமியம் வகை டூவீலர்கள் என்ற பெயரில் 20 லட்சம் ரூபாய்க்கு கூட இதே இந்தியாவில் விற்பனையாகிறது.

இத்தனை பிரச்னைகளுக்கு நடுவிலும், அடிப்படைத் தேவைகளின் விலைவாசி உயரவில்லை. கட்டுப்பாட்டுக்குள் இருக்கிறது. இதனால் தான் பண வீக்கம் கட்டுக்குள் இருக்கிறது.

வீழ்ச்சியும், எழுச்சியும் நமது பார்வையில் தான் இருக்கிறது. வங்கதேசத்தின் ஜிடிபி 8.31 சதவீதம், நேப்பாளம் 7.9 சதவீதம் என்று தம்மாந்துண்டு நாடுகள் வளர்ச்சி பாதையில் வேகமாக முன்னேறும் போது இந்தியா வெறும் 5 சதவீதம் தான் என்பது எவ்வளவு சாதாரணமானது. 

இதற்காகவா மோடியை வெற்றி பெற செய்தோம். கடந்த 10 ஆண்டுகளாக நாட்டை பொருளாதார வளர்ச்சிப் பாதையை நோக்கி மவுனமாகவே இழுத்து சென்று நாட்டின் அனைத்து தரப்பினரின் பாராட்டையும் பெற்ற மன்மோகன் சிங் பிரதமராக இருக்கலாமே என்றெல்லாம் கருத்து கூறுகிறார்கள்.

நம்மை நேபாளம், வங்கதேசத்துடன் ஒப்பிடுவது, தேர்தலில் ஒரே ஒரு தொகுதியில் நின்ற கட்சி, அதில் வெற்றி பெற்றுவிட்டால், 100 சதவீத வெற்றி என்ற அடிப்படையில், அந்த கட்சிதான் மிகப் பெரிய கட்சி என்று அங்கீகரித்தால் எப்படியோ அப்படிதான்.

உண்மையில் அமெரிக்கா, சீனா, ரஷ்யா போன்ற நாடுகளுடன் இந்தியாவை ஒப்பிட வேண்டும் அந்த நாடுகள் இந்தியாவை விட குறைவான வளர்ச்சியை தான் பெற்றுள்ளன. ஆனாலும் அந்த நாட்டில் இது போன்ற கூக்குரல்கள் எழவில்லை.

3 படி அரிசி லட்சியம், ஒரு படி நிச்சயம் என்பதைப் போல 7 சதவீதம் வளர்ச்சியை இலக்காக வைத்து முயற்சி செய்தாலும், 5 சதவீதம் வளர்ச்சி எட்டப்பட்டுள்ளது.

பொருளாதாரத்தில் நிகழ்ந்த பித்தலாட்டங்களை களைந்த பின்னர் ஏற்பட்டுள்ள இந்த வளர்ச்சி நிலையானது மட்டும் அல்லாமல் நீடித்தது.

மன்மோகன் சிங் ஆட்சிக்காலத்தில் ஜிடிபி அதிகபட்சம் 9 சதவீதம் வரை இருந்தது. தற்போது இது வீழ்ச்சி அடைந்துவிட்டது என்று பேசுபவர்கள் வசதியாக பண வீக்கத்தை மறந்துவிடுகிறார்கள். மன்மோகன்சிங் ஆட்சியில் இது இரட்டை இலக்கமாக இருந்தது. மேலும் உலகின் அனைத்து நாடுகளிலும் கடன் வாங்குவதையே தன் முதற்கடமையாக கொண்டிருந்தார். அவர் வாங்கிய கடன்கள் நாட்டை செழிப்பாக இருப்பது போல காட்டியது. 

பருப்பு உள்ளிட்ட உணவு பொருட்கள் விலை 3 இலக்கம் வரை எட்டியது. ஆனால் அப்போது இந்த அளவிற்கு விமர்சனம் இல்லாததற்கு காரணம், அவர்கள் இடதுசாரி சிந்தனையாளர்களை பகைக்காமல் இருந்ததும், இந்த அளவிற்கு சமூக ஊடகங்கள் இல்லாததும் தான்.

வளர்ச்சி என்பது உடல் முழுமையாக இருக்க வேண்டும். அது ஒரு பக்கம் மட்டும் இருந்தால் வீக்கம் என்று தான் சொல்லுவார்கள். அதே போல எது வளர்கிறது என்றும் கவனிக்க வேண்டும்.  உதியன் பெருத்தால் உத்திரத்துக்கு கூட ஆகாது என்பார்கள். அதைப் போன்ற வளர்ச்சி பெற்றாலும் பலன் இல்லை. காங்கிரஸ் ஆட்சியில் உதியன் பெருத்தது போன்ற வளர்ச்சி. மோடி ஆட்சியின் வளர்ச்சி பனை மரத்தி்ன வளர்ச்சி போன்றது. நட்டவனுக்கு பலன் கிடைக்காவிட்டாலும், தொடர்ந்து பல தலைமுறைகள் அது பலன் கொடுக்கும்.

சரி இந்த ஆட்சியில் குறையே கிடையாதா என்றால் கட்டாயம் குறை இருக்கிறது. சுந்திரத்திற்கு பிறகு எதையுமே கண்டு கொள்ளலாமல் விட்டுவிட்டு, 5 முதல் 7 ஆண்டுகளில் எல்லாபிரச்னைகளுக்கும் தீர்வு காண முயற்சிப்பது தவறு. அது வலிமை இல்லாதவர்களை கொன்று விடும். அந்த தவறு நடக்கிறது. இதற்கு காரணம் திருத்துபவன் அல்ல, கடந்த பல ஆண்டுகளாக திருடியவன் என்பதை அறிந்து கொண்டால், சிரமத்தை பொறுக்கும் மனநிலை ஏற்படும். அது ஒன்று தான் இந்த பொருளாதார புரட்டுக்காலத்தை கடப்பதற்கு சிரமமான வழி.

newstm.in


 

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP