Logo

மகாராஷ்டிராவின் அடுத்த முதலமைச்சர் சிவசேனா கட்சியை சேர்ந்தவரா ??

மகாராஷ்டிரா மாநிலத்தில், குடியரசுத் தலைவரின் ஆட்சி அமல்படுத்தபட்டிருப்பதை தொடர்ந்து, ஆட்சியை பிடிப்பதற்காக கலந்துரையாடலில் ஈடுபட்டிருக்கும் சிவசேனா, தேசியவாத காங்கிரஸ், மற்றும் காங்கிரஸ் கட்சிகள் மூன்றும் இணைந்து பொதுவான குறைந்தபட்ச திட்டத்தை வரையறுக்க போவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
 | 

மகாராஷ்டிராவின் அடுத்த முதலமைச்சர் சிவசேனா கட்சியை சேர்ந்தவரா ??

மகாராஷ்டிரா மாநிலத்தில், குடியரசுத் தலைவரின் ஆட்சி அமல்படுத்தபட்டிருப்பதை தொடர்ந்து, ஆட்சியை பிடிப்பதற்காக கலந்துரையாடலில் ஈடுபட்டிருக்கும் சிவசேனா, தேசியவாத காங்கிரஸ், மற்றும் காங்கிரஸ் கட்சிகள் மூன்றும் இணைந்து பொதுவான குறைந்தபட்ச திட்டத்தை வரையறுக்க போவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. 

மகாராஷ்டிரா மாநில தேர்தலை தொடர்ந்தும், ஆட்சி அமைப்பதில் சிக்கல் நீடித்து வந்ததை தொடர்ந்து, தேர்தலில் போட்டியிட்ட எந்த கட்சியாலும் பெரும்பாண்மையையும் நிரூபிக்க முடியாத நிலையில், குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்தின் ஒப்புதலுடன் அம்மாநிலத்தில் குடியரசுத் தலைவரது ஆட்சி அமல்படுத்தபட்டது. 

இதனிடையில், ஆட்சி அமைக்கும் நோக்கத்துடன் தேசியவாத காங்கிரஸூடன் சிவசேனா கலந்துரையாடலில் ஈடுபடவுள்ளதாக செய்திகள் வெளியாகின. இது குறித்து கூறிய சிவசேனா கட்சி தலைவர் உத்தவ் தாக்கரே, தேசியவாத காங்கிரஸ் கட்சிக்கும் தங்களுக்கும் இடையே உள்ள மாற்று கருத்துக்களை பேசி சரி செய்த பின்னர் ஆட்சி அமைப்பது குறித்து அறிவிப்பதாக கூறியிருந்தார்.

இவரை தொடர்ந்து, தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத் பவாரும், காங்கிரஸுடன் கலந்துரையாடிய பின்னர் சிவசேனாவின் கோரிக்கைகள் குறித்த ஒரு தீர்மானத்திற்கு வருவிருப்பதாக கூறியிருந்தார். இதனை தொடர்ந்து, தற்போது, தேர்தலில் வெற்றி பெற்றுள்ள போதும் சுய மரியாதையை பெரிதாக எண்ணி கூட்டணியை விட்டு வெளியே வந்துள்ள சிவசேனாவின் கருத்துக்களுக்கு மரியாதை அளிக்க வேண்டும் என்பதால் சிவசேனாவை சேர்ந்த ஒருவரே முதலமைச்சர் பதவியில் அமர்வார் என்று கூறியுள்ளார் என்.சி.பி கட்சியின் தலைவரான நவாப் மாலிக். 

மேலும், சிவசேனாவுடன் இணைந்து காங்கிரஸ் ஆட்சியமைக்குமா என்பது குறித்து விரைவில் தீர்மானிக்கப்படும் என்று அவர் கூறியுள்ளார். இதை தொடர்ந்து, இக்கட்சியின் தலைவர் சரத் பவார், காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியை டெல்லியில் உள்ள அவரது இல்லத்தில் வைத்து சந்திக்கவிருப்பதால், அதற்கு பின்னர் இது குறித்து ஓர் தீர்மானம் எடுக்கப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 

மகாராஷ்டிரா மாநில முதலமைச்சர் பதவி சிவசேனாவிற்கு உறுதி செய்யப்படுமாயின், அம்மாநிலத்தின் துணை முதலமைச்சர்களாக காங்கிரஸிலிருந்து ஒருவரும், என்.சி.பியில் இருந்து ஒருவரும் நியமிக்க படுவார்களா, அல்லது முதலமைச்சர் பதிவியை 2.5ஆண்டுகளாக பிரித்து கொள்வார்களா, அல்லது ஒரு சிவசேனா முதலமைச்சர், 1 துணை முதலமைச்சர்(என்.சி.பி/காங்கிரஸ்) மற்ற மாநில அமைச்சர்கள் என பிரித்து நியமிக்கப்படுவார்களா என்பது போன்ற கேள்விகளுக்கான பதில்கள் விரைவில் அறிவிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 

Newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP