அக்னிபாதையில் பயணம் செய்து கொண்டிருக்கிறது சிவசேனா - சஞ்சய் ராவுத் கருத்து!!

மகாராஷ்டிரா மாநிலத்தில் ஆட்சி அமைப்பதற்காக தற்போது அக்னிபாதையில் சிவசேனா கட்சி பயணித்து கொண்டிருப்பதாக தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார் அக்கட்சியின் தலைவர் சஞ்சய் ராவுத்.
 | 

மகாராஷ்டிரா மாநில தேர்தலை தொடர்ந்தும், பாஜக-சிவசேனா வெற்றி கூட்டணியிடையான கருத்த வேறுபாடுகளினால் ஆட்சி அமைப்பதில் சிக்கல் நீடித்து வந்தது. இதனிடையில் தங்களது கோரிக்கையை ஏற்க மறுத்த பாஜகவிற்கு எதிராக பலவகையான கருத்துக்களை தொடர்ந்து முன்வைத்து வந்தவர் சிவசேனா கட்சி தலைவர் சஞ்சய் ராவுத். 

இவர், கடந்த சில தினங்களுக்கு முன்பு, இதய வலியால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். மருத்துவர்களின் சிகிச்சைகளை தொடர்ந்து மருத்துவமனையில் இருக்கும் நிலையிலும், மகாராஷ்டிரா அரசியலில் ஆர்வம் காட்டி வரும் இவர், தனது ட்விட்டர் பக்கத்தில் தொடர்ந்து தனது கருத்துக்களை பதிவு செய்து வருகிறார். 

இதனிடையில், மகாராஷ்டிராவில் ஆட்சி அமைப்பதற்கான பெருமாபாண்மையை எந்த கட்சியாலும் நிரூபிக்க இயலாத நிலையில், நேற்று அம்மாநிலத்தில், குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்தின் ஒப்புதலுடன் குடியரசுத் தலைவர் ஆட்சி அமல்படுத்தபட்டது.

இந்நிலையில், சிவசேனா கட்சி தலைவர் சஞ்சய் ராவுத், மகாராஷ்டிராவில் ஆட்சி அமைப்பதற்காக தற்போது சிவசேனா அக்னிபாதையில் பயணித்து கொண்டிருப்பதை குறிப்பால் உணர்த்தும் வகையில், தனது ட்விட்டர் பக்கத்தில் "அக்னிபாத்" என்று பதிவிட்டுள்ளார்.

Newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP