ஆட்சி அமைக்க தயாராக உள்ளது சிவசேனா - சஞ்சய் ராவுத் !!!

மகாராஷ்டிரா மாநிலத்தில் ஆட்சி அமைப்பதில் இழுபறி நீடித்து வரும் நிலையில், தற்போதைய ஆட்சி நேற்றுடன் முடிவடைந்துள்ளதை தொடர்ந்து, ஆட்சி அமைக்க எந்த கட்சியும் முன்வர தயாராக இல்லை எனில், சிவசேனா அந்த பொறுப்பை ஏற்று கொள்ளும் என்று கூறியுள்ளார் அக்கட்சியின் தலைவர் சஞ்சய் ராவுத்.
 | 

மகாராஷ்டிரா மாநிலத்தில் தேர்தல் முடிவுகள் வெளியிடப்பட்டு சுமார் 2 வாரங்கள் கடந்து விட்டதோடு, தற்போதைய ஆட்சியும் நேற்றுடன் முடிவடைந்து விட்ட நிலையில், அம்மாநில முதலமைச்சர் தேவேந்திர பட்னாவிஸூம் தனது ராஜினாமா கடிதத்தை சமர்ப்பித்து விட்டார். 

இத்தனையும் முடிவடைந்து விட்ட நிலையில், தேர்தலில் வெற்றுபெற்ற நேரம் தொட்டு தொடங்கிய பாரதிய ஜழதா-சிவசேனா கூட்டணி கட்சிகளின் முதலமைச்சர் பதவி குறித்த கருத்து வேறுபாடு இந்த நிமிடம் வரை நீடித்து வருகிறது. 50-50 விதியை பின்பற்றலாம் என்ற தனது கோரிக்கைகளுக்கு ஒப்புதல் அளிக்க தயாராக இல்லாத கூட்டணி கட்சியான பாஜகவிடம் பேசுவதற்கு தொடர்ந்து மறுப்பு தெரிவித்து வருகிறார் சிவசேனா கட்சி தலைவர் உத்தவ் தாக்கரே.இவரை தொடர்ந்து, ஆட்சி அமைப்பது குறித்த கலந்துரையாடல் மேற்கொள்ள வருமாறு பலமுறை அழைக்க முயற்சித்தும் பதலளிக்க மறுத்த சிவசேனாவின் மெத்தனத்தினால் அதிருப்தியில் உள்ளது பாஜக.

இந்நிலையில், பாஜகவிற்கு எதிரான தனது கருத்துக்களை தொடர்ந்து முன் வைத்து வரும் சிவசேனா கட்சியின் தலைவர் சஞ்சய் ராவுத், தனது அடுத்த அறிவிப்பாக, மகாராஷ்டிராவில் ஆட்சி அமைக்கும் பொறுப்பை சுமப்பதற்கு எந்த கட்சியும் முன்வர தயாராக இல்லை எனில், சிவசேனா அந்த பொறுப்பை ஏற்கும் என்று கூறியுள்ளார்.

மேலும், பாஜக தலைவர் தேவேந்திர பட்னாவிஸ், பிறரை அச்சுறுத்துவதன் மூலம் சாதிக்க நினைக்கும் ரீதியான அரசியலை கைவிட வேண்டும் என்றும் அப்படி பிறரை அச்சுறுத்தி வாழந்து வந்த ஹிட்லர் மறைந்து விட்டார் என்பதை பட்னாவிஸ் உணர்ந்து செயல்பட வேண்டும் என்றும் கூறியுள்ளார்.

Newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP