Logo

முன்னாள் முதல்வர் மகனுக்கு சீட் மறுப்பு

மறைந்த கோவா முதல்வர் மனோகர் பாரிக்கரின் மகனுக்கு மக்களவை தேர்தலில் போட்டியிட பாஜக வாய்ப்பளிக்கவில்லை. ஆனாலும் அவர் பாஜக வேட்பாளரை ஆதரித்து தீவிர பிரசாரம் மேற்கொள்வார் என அக்கட்சியின் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
 | 

முன்னாள் முதல்வர் மகனுக்கு சீட் மறுப்பு

மறைந்த கோவா முதல்வர் மனோகர் பாரிக்கரின் மகனுக்கு பனாஜி சட்டமன்ற இடைத்தேர்தலில் போட்டியிட பாஜக வாய்ப்பளிக்கவில்லை. ஆனாலும் அவர் பாஜக வேட்பாளரை ஆதரித்து தீவிர பிரசாரம் மேற்கொள்வார் என அக்கட்சியின் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மறைந்த கோவா முதல்வர் மனோகர் பாரிக்கர்  கடந்த மார்ச் மாதம் 17ம் தேதி உடல் நலக்குறைவால் காலமானார். இதையடுத்து அவர் எம்எல்ஏவாக தேர்வு செய்யப்பட்ட பனாஜிக்கு இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டது.

இந்நிலையில் பனாஜி தொகுதிக்கு சித்தார்த் குன்கேலின்கர் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார். இவர் கடந்த 2015ம் ஆண்டு நடைபெற்ற இடைத்தேர்தல் மற்றும் 2017ம் ஆண்டு நடந்த சட்டமன்ற தேர்தலில் வெற்றி பெற்றார்.

இதையடுத்து மாநில அரசியலுக்கு மனோகர் பாரிக்கர் திரும்பிய போது அவருக்கு வாய்ப்பளிப்பதற்காக தனது பதவியை ராஜினாமா செய்தார். இந்நிலையில் கோவா மாநில சட்டமன்ற இடைத்தேர்தலில் பனாஜி தொகுதியில் போட்டியிட சித்தார்த் குன்கேலின்கருக்கு பாஜக சார்பில் வாய்ப்பளிக்கப்பட்டுள்ளது.

இது குறித்து தனியார் செய்தி நிறுவனத்திற்கு பேட்டியளித்த மனோகர் பாரிக்கரின் மகன் உத்பால் பாரிக்கர், பனாஜி தொகுதியில் கடந்த 25 ஆண்டுகளாக என் தந்தை தேர்தலில் போட்டியிட்டுள்ளார். அதனால் இந்த தொகுதியை கைப்பற்றுவதே எங்கள் நோக்கமாகும்.

அதற்காக கட்சி என்ன செயல்பாட்டை எடுத்தாலும் அதற்கு நான் கட்டுப்படுவேன் என்று தெரிவித்துள்ளார். மேலும் பாஜக வேட்பாளரை ஆதரித்து நான் தீவிர பிரசாரத்தில் ஈடுபடுவேன் என்றார்.

newstm.in

 

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP