நீங்க இங்க கத்துறது மேற்குவங்கம் வரை கேட்கனும்: அமித் ஷா பேச்சு

மேற்குவங்கம் வரை கேட்கும் அளவுக்கு முழக்கமிடுங்கள் என்று குஜராத்தில் இன்று நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் அக்கட்சியின் தலைவர் அமித் ஷா பேசியுள்ளார்.
 | 

மக்களவை தேர்தலில் வெற்றி பெற்றதை தொடர்ந்து, தனது சொந்த ஊரான குஜராத்திற்கு சென்ற பிரதமர் நரேந்திர மோடி, சர்தார் வல்லபாய் படேல் சிலைக்கு மரியாதை செலுத்தினார். அப்போது கட்சியின் தலைவர் அமித் ஷா உடனிருந்தார்.

இதையடுத்து, அகமதாபாத்தில் உள்ள பாஜக அலுவலகத்தில் அக்கட்சியின் நன்றி அறிவிப்பு  கூட்டம் தற்போது நடைபெற்று வருகிறது.

கூட்டத்தில் பேசிய அக்கட்சியின் தலைவர் அமித் ஷா, ‘ குஜராத் மக்களவை தேர்தலில் 26 இடங்களில் வெற்றி பெற்றதையடுத்து,  நரேந்திர மோடி இங்கு வந்துள்ளார். குஜராத்தில் பாஜக தொண்டர்கள் முழக்கமிடுவது மேற்குவங்கத்திற்கு கேட்க வேண்டும். மேற்குவங்கம் வரை கேட்கும் அளவுக்கு முழக்கமிடுங்கள்’ என்று பேசினார். 

மேலும், சூரத்தில் தீ விபத்தில் உயிரிழந்த 22 பேரின் குடும்பத்தினருக்கு அமித் ஷா இரங்கலும் தெரிவித்தார். 

newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP