காங்கிரஸ் தலைவா்களை சிறையில் அடைப்பேன்? பிரதமா் மோடி பேச்சு

பிரதமர் நரேந்திரமோடி தனது சொந்த மாநிலமான குஜராத்தில் இன்று தேர்தல் பிரசாரம் மேற்கொண்டார். ஜுனாகரில் நடந்த பொதுக்கூட்டத்தில் பேசிய பிரதமர் மோடி, காங்கிரசார் ஏழைகள் பணத்தை கொள்ளையடித்து இருக்கிறார்கள் என்று குறிப்பிட்டாா்.
 | 

காங்கிரஸ் தலைவா்களை சிறையில் அடைப்பேன்? பிரதமா் மோடி பேச்சு

பிரதமர் நரேந்திர மோடி தனது சொந்த மாநிலமான குஜராத்தில் இன்று தேர்தல் பிரசாரம் மேற்கொண்டார். ஜுனாகரில் நடந்த பொதுக்கூட்டத்தில் பேசிய பிரதமர் மோடி, காங்கிரசார் ஏழைகள் மற்றும் கர்ப்பிணி பெண்களுக்கான பணத்தையும் கொள்ளையடித்து இருக்கிறார்கள் என்று குறிப்பிட்டாா்.

ஒரு காலத்தில் கர்நாடக மாநிலம் காங்கிரசாருக்கு பணம் கொட்டும் ஏ.டி.எம். எந்திரமாக இருந்தது. இப்போது மத்திய பிரதேச மாநிலம் காங்கிரசின் ஏ.டி.எம். ஆக மாறி இருக்கிறது. ஊழல், முறைகேட்டில் ஈடுபட்ட காங்கிரசார் இன்று சிறை கதவை தட்டும் நிலை உருவாக்கப்பட்டுள்ளது.

இன்னும் 5 ஆண்டுகள் எங்களிடம் ஆட்சியை கொடுத்தால் அவர்கள் சிறைக்குள் இருப்பார்கள். நாம் பாகிஸ்தானில் விமான தாக்குதல் நடத்தினோம். ஆனால் அது இந்தியாவில் உள்ள காங்கிரசை பாதிக்கிறது. உங்களின் மைந்தனாகவும், காவலனாகவும் உள்ள என்னை டிக்‌ஷனரியில் உள்ள அனைத்து மோசமான வார்த்தைகளையும் பயன்படுத்தி திட்டுகிறார்கள்.

நாட்டில் இருந்து காஷ்மீரை பிரிக்க வேண்டும், அங்கு தனி பிரதமர் இருக்க வேண்டும் என்று நினைப்பவர்களுக்கு காங்கிரஸ் ஆதரவாக இருக்கிறது. நாட்டில் உள்ள அனைத்து மன்னர் பிரதேசங்களையும் சர்தார் வல்லபாய் பட்டேல் வெற்றிகரமாக இந்தியாவோடு இணைத்தார்.

ஆனால் நேரு தலையீடு காரணமாக காஷ்மீரில் மட்டும் அது நடக்கவில்லை. இதனால்தான் இன்று நமது வீரர்கள் தங்கள் உயிரை இழக்கும் நிலை ஏற்பட்டு உள்ளது என்று பிரதமா் மோடி தொிவித்தாா்.
newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP