மேற்கு வங்கம் : தேர்தல் வன்முறையில் பாஜக தொண்டர் பலி

மேற்கு வங்க மாநிலத்தில் தேர்தலையொட்டி நடைபெற்ற வன்முறை சம்பவத்தில் பாஜக தொண்டர் ஒருவர் உயிரிழந்தார். மேலும், இருவர் துப்பாக்கியால் சுடப்பட்டனர். மக்களவைத் தேர்தலில் இன்று நடைபெற்று வரும் ஆறாம் கட்ட வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது.
 | 

மேற்கு வங்கம் : தேர்தல் வன்முறையில் பாஜக தொண்டர் பலி

மேற்கு வங்க மாநிலத்தில் தேர்தலையொட்டி நடைபெற்ற வன்முறை சம்பவத்தில் பாஜக தொண்டர் ஒருவர் பலியானார். மேலும், இருவர் துப்பாக்கியால் சுடப்பட்டனர்.

மக்களவைத் தேர்தலில் இன்று நடைபெற்று வரும் ஆறாம் கட்ட வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது. இதில், மேற்கு வங்க மாநிலத்தில் எட்டு தொகுதிகளுக்கு தேர்தல் நடைபெறுகிறது.

தேர்தலையொட்டி, கிழக்கு மிதுனபுரி தொகுதிக்குட்பட்ட பகாபன்பூர் பகுதியில் நேற்றிரவு நடைபெற்ற வன்முறை சம்பவத்தில் பாஜக தொண்டர்கள்  இருவர் துப்பாக்கியால் சுடப்பட்டனர். உயிருக்கு ஆபத்தான நிலையில் அவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இதனிடையே, ஜார்கிராம் தொகுதிக்குட்பட்ட கோபிபலாபூர் பகுதியில் பாஜக தொண்டரான ரமண் சிங் என்பவர் மர்மமான முறையில் இறந்து கிடந்தார்.
கட்சித் தொண்டரின் மரணத்துக்கு திரிணாமூல் காங்கிரஸ் கட்சிதான் காரணம் என பாஜக குற்றம்சாட்டி வருகிறது.

மக்களவைத் தேர்தல் தொடங்கிய நாள் முதலே, மேற்கு வங்க மாநிலத்தில் ஆளும் திரிணாமூல் காங்கிரஸ் தொண்டர்களுக்கும், பாஜக தொண்டர்களுக்கும் இடையே மோதல் போக்கு நிலவி வருகிறது.

newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP