Logo

பாஜக தேர்தல் அறிக்கை வரும் 7 ஆம் தேதி வெளியிடப்படும் என தகவல்

பாஜக, வரும் 7-ம் தேதி தேர்தல் அறிக்கையை வெளியிடலாம் என தகவல்கள் வெளியாகி உள்ளன. இந்தியாவில் மக்களவைத் தேர்தல் வரும் 11-ம் தேதி தொடங்கி மே 19-ம் தேதி வரை 7 கட்டங்களாக நடைபெறுகிறது.
 | 

பாஜக தேர்தல் அறிக்கை வரும் 7 ஆம் தேதி வெளியிடப்படும் என தகவல்

பாஜக, வரும் 7-ம் தேதி தேர்தல் அறிக்கையை வெளியிடலாம் என தகவல்கள் வெளியாகி உள்ளன.

இந்தியாவில் மக்களவைத் தேர்தல் வரும் 11-ம் தேதி தொடங்கி மே 19-ம் தேதி வரை 7 கட்டங்களாக நடைபெறுகிறது. இதற்கான களப்பணிகளில் அரசியல் கட்சிகள் தீவிரமாக ஈடுபட்டுள்ளன. தேர்தல் அறிக்கைகள் மூலம், மக்களுக்கு பல்வேறு வாக்குறுதிகளை அளித்து, பிரசாரம் மேற்கொண்டுள்ளன.

அவ்வகையில் மிகுந்த எதிர்பார்ப்புக்கு மத்தியில் காங்கிரஸ் கட்சி கடந்த செவ்வாய்க்கிழமை தேர்தல் அறிக்கையை வெளியிட்டது.

கட்சியின் தலைவர் ராகுல் காந்தி வெளியிட்ட இந்த தேர்தல் அறிக்கையில், வறுமை ஒழிப்பு, வேலைவாய்ப்பு, விவசாய கடன்கள் தள்ளுபடி, ஏழைகளுக்கு குறைந்தபட்ச வருவாய் உறுதி திட்டம் உள்ளிட்ட பல்வேறு அம்சங்கள் இடம்பெற்றிருந்தன.

இந்நிலையில், ஆளுங்கட்சியான பாஜக, வரும் 7-ம் தேதி தேர்தல் அறிக்கையை வெளியிடலாம் என தகவல்கள் வெளியாகி உள்ளன. கடந்த மக்களவை தேர்தலின்போதும் (2014), இதே நாளில்தான் பாஜக தேர்தல் அறிக்கையை வெளியிட்டது.

எனவே, அந்த தேதியை இந்த முறையும் தேர்வு செய்திருப்பதாக கூறப்படுகிறது. இந்த தேர்தல் அறிக்கையில், காங்கிரஸ் கட்சியின் வாக்குறுதிகளை மிஞ்சும் அளவிற்கு, புதிய திட்டங்கள் இடம்பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.

newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP