ஈஸ்வர சந்திர வித்யா சாகரின் சிலை புதுப்பிக்கப்பட்டு மீண்டும் அதே இடத்தில் நிறுவப்படும்: மோடி உறுதி!

மேற்குவங்க கலவரத்தில் சேதமடைந்த ஈஸ்வர சந்திர வித்யா சாகரின் சிலை புதுப்பிக்கப்பட்டு மீண்டும் அதே இடத்தில் வைக்கப்படும் என பிரதமர் மோடி உறுதி அளித்துள்ளார்.
 | 

உத்தரப்பிரதேசம் மாநிலத்தின் மாவ் நகரில் நடந்த தேர்தல் பிரசார கூட்டத்தில் பேசிய பிரதமர் நரேந்திர மோடி, "மேற்குவங்காளத்தில் சமூக விரோத நடவடிக்கைகள் அதிகரித்துள்ளது. அமித் ஷா அவர்களின் பேரணியில் சமூக விரோதிகள் புகுந்து வன்முறையை ஏற்படுத்தியுள்ளனர். வன்முறையை ஏற்படுத்திய சமூக விரோதிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும். 

ஈஸ்வர சந்திர வித்யா சாகரின் சிலை புதுப்பிக்கப்பட்டு மீண்டும் அதே இடத்தில் நிறுவப்படும்: மோடி உறுதி!

இந்த வன்முறையில் மேற்குவங்க சீர்திருத்தவாதி ஈஸ்வர சந்திர வித்யா சாகரின் சிலை சேதமடைந்துள்ளது வருந்தத்தக்கது. சேதமடைந்த ஈஸ்வர சந்திர வித்யா சாகரின் சிலை புதுப்பிக்கப்பட்டு மீண்டும் அதே இடத்தில் நிறுவப்படும்" என்று பேசியுள்ளார். 

மேற்கு வங்க மாநிலத்தில் தேர்தலையொட்டி, அமித் ஷாவின் பேரணியில் ஏற்பட்ட வன்முறை சம்பவத்தில் பாஜக தொண்டர் ஒருவர் பலியானது குறிப்பிடத்தக்கது. 

newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP