ராகுல் காந்தி பேசியது தேர்தல் விதிமீறல் இல்லை: தேர்தல் ஆணையம்

தேர்தல் பிரசாரத்தின்போது, ராகுல்காந்தி அமித் ஷாவை சுட்டிக்காட்டிப் பேசியது, தேர்தல் விதிமீறல் இல்லை என தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.
 | 

ராகுல் காந்தி பேசியது தேர்தல் விதிமீறல் இல்லை: தேர்தல் ஆணையம்

தேர்தல் பிரசாரத்தின்போது, ராகுல்காந்தி அமித் ஷாவை சுட்டிக்காட்டிப் பேசியது, தேர்தல் விதிமீறல் இல்லை என தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. 

மத்தியப்பிரதேசம் மாநிலம் ஜபல்பூர் தொகுதியில் கடந்த மாதம் 23-ஆம் தேதி நடைபெற்ற தேர்தல் பிரசாரத்தில் காங்கிரஸ் கட்சியின் தலைவர் ராகுல் காந்தி கலந்து கொண்டு பேசியபோது, கொலை குற்றவாளி பாரதிய ஜனதா தலைவர் அமித் ஷா. எவ்வளவு பெருமைக்குரியது என குறிப்பிட்டுள்ளார். 

இதனையடுத்து ராகுல் காந்தி பேசியது வெறுப்புணர்வை ஏற்படுத்தும் விதமாக உள்ளதாக பாஜகவினர் தேர்தல் ஆணையத்திடம் புகார் அளித்தனர்.  இந்த புகாரை விசாரித்த தேர்தல் ஆணையம், ஜபல்பூர் பகுதியில் பிரசாரத்தில் ஈடுபட்ட காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி பாஜக தலைவர் அமித் ஷாவை சுட்டிக்காட்டி பேசியது தேர்தல் விதிகளை மீறியது அல்ல என தெரிவித்துள்ளது. 

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP