Logo

தேர்தலுக்காக எதுவும் தடைபடவில்லை: பிரதமர் மாேடி பெருமிதம்

‛‛மக்களவை தேர்தலுக்காக, நாட்டு மக்களின் அடிப்படை தேவைக்கான விஷயங்களோ, பொழுது போக்கு அம்சங்களோ எதுவும் தடைபடவில்லை. தேர்வு, விளையாட்டு, பண்டிகை என அனைத்தும் நடைபெற்ற நிலையில், தேர்தலும் அதோடு சேர்ந்தே நடைபெற்றது மிகப் பெரிய சாதனை’’ என பிரதமர் நரேந்திர மாேடி மகிழ்ச்சி தெரிவித்துள்ளார்.
 | 

தேர்தலுக்காக எதுவும் தடைபடவில்லை: பிரதமர் மாேடி பெருமிதம்

‛‛மக்களவை தேர்தலுக்காக, நாட்டு மக்களின் அடிப்படை தேவைக்கான விஷயங்களோ, பொழுது போக்கு அம்சங்களோ எதுவும் தடைபடவில்லை. தேர்வு, விளையாட்டு, பண்டிகை என அனைத்தும் நடைபெற்ற நிலையில், தேர்தலும் அதோடு சேர்ந்தே நடைபெற்றது மிகப் பெரிய சாதனை’’ என பிரதமர் நரேந்திர மாேடி மகிழ்ச்சி தெரிவித்துள்ளார். 

டெல்லியில், பாரதிய ஜனதா கட்சித் தலைமையகத்தில், பத்திரிக்கையாளர்களை சந்தித்த பிரதமர் நரேந்திர மாேடி பேசியதாவது: ‛‛ நாடு முழுவதும் ஜனநாயக திருவிழா மிக அமைதியாகவும், நல்ல முறையிலும் நடைபெற்றுள்ளது. இன்னும் ஒரு கட்ட வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது. அதுவும், அமைதியாகவே நடைபெறும் என நம்புவோம். தேர்தல் பிரசாரத்திற்காக நான் மக்களிடம் சென்ற போது, என்னையும், எங்கள் கட்சியையும் நம்பி, ஐந்து ஆண்டுகள் நாட்டை ஆளும் பொறுப்பை அளித்தமைக்காக அவர்களிடம் நன்றி கூறினேன். 

பல தருணங்களில், தேசத்திற்காகவும், தேச முன்னேற்றத்திற்காகவும், மக்கள் அரசுக்கு உறுதுணையாக இருந்துள்ளனர். அவர்களுக்கு மீண்டும் ஒரு முறை நன்றி செலுத்திக் கொள்கிறேன். பாரதிய ஜனதா கட்சியின் தேர்தல் பிரசாரம் ஜனவரி மாதம் துவங்கியது. நாடு முழுவதும் சுற்றி சுழன்று பிரசாரம் செய்தேன். 

பிரசாரத்தின் முதல் நாள் நான் எவ்வளவு உற்சாகமாக இருந்தேனோ, அதே அளவு உற்சாகத்துடன் தற்போது உங்களை சந்திக்க வந்துள்ளேன். பல திட்டங்களை செயல்படுத்தியுள்ளோம். மேலும் பல திட்டங்களை செயல்படுத்துவோம் என்றே, மக்களிடம் வாக்கு கேட்டோம். அதற்கு மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்தது. 

கடந்த, 2014ம் ஆண்டு மக்களவை தேர்தலின் போது, மக்கள் அதிகம் விரும்பி பார்க்கும் ஐ.பி.எல்., போட்டிகளில் சில, வெளிநாட்டில் நடத்தப்பட்டது. தேர்தல் காரணங்களுக்காக, இந்த இடமாற்றம் நடைபெற்றது. ஆனால் தற்போது, ஐ.பி.எல்.,ம் தேர்தலும் ஒரே சமயத்தில் நடைபெற்றாலும் யாரையும் பாதிக்கவில்லை. 

ரம்ஜான், ஈஸ்டர், ஹனுமான் ஜெயந்தி வழக்கம் போல் கொண்டாடப்பட்டது. பள்ளி, கல்லுாரி தேர்வுகள் என அனைத்தும் எந்த தடையும் இல்லாமல் நடைபெற்றது. இது மிகப்பெரிய சாதனை. மிகப் பெரிய ஜனநாயக நாட்டில் நடைபெறும் தேர்தல், வழக்கமான நிகழ்வுகளை பாதிக்காமல் நடைபெற்றது மகிழ்ச்சி அளிக்கிறது. இதில், மக்களின் பங்கு மிக அதிகம் என்பதையும் அங்கீகரித்தே ஆக வேண்டும்’’ என அவர் பேசினார்.

newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP