கடைசி கட்ட மக்களவை தேர்தல்: நாளை வாக்குப்பதிவு 

மக்களவை தேர்தலில் கடைசி கட்டமாக 7 மாநிலங்களில் உள்ள 59 மக்களவை தொகுதிகளில் நாளை வாக்குப்பதிவு நடைபெறுகிறது.
 | 

கடைசி கட்ட மக்களவை தேர்தல்: நாளை வாக்குப்பதிவு 

மக்களவை தேர்தலில் கடைசி கட்டமாக 7 மாநிலங்களில் உள்ள  59 மக்களவை தொகுதிகளில் நாளை வாக்குப்பதிவு நடைபெறுகிறது. உத்தரபிரதேசம், பஞ்சாப் - 13, மேற்குவங்கம் - 9, பீகார், மத்தியபிரதேசம் - 8, ஜார்க்கண்ட் - 3, இமாச்சல்  பிரதேசம் - 4 என  59  தொகுதிகளில் நாளை தேர்தல் நடைபெறுகிறது. பிரதமர் மோடி, நடிகர் சத்ருகன் சின்ஹா உள்ளிட்ட 918 வேட்பாளர்கள் தேர்தல் களத்தில் உள்ளனர். ஏழு கட்டங்களிலும் பதிவான மொத்த வாக்குகளும் வரும் 23-ஆம் தேதி எண்ணப்படுகின்றன.

இதேபோல, தமிழகத்தின் நான்கு சட்டப்பேரவை தொகுதிகளுக்கான இடைத்தேர்தலும் நாளை நடைபெறுகிறது. அரவக்குறிச்சி, ஒட்டப்பிடாரம், சூலூர், திருப்பரங்குன்றம்  ஆகிய சட்டமன்ற தொகுதிகளில் நாளை வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது. மேலும், மறுவாக்குப்பதிவுக்கு உத்தரவிடப்பட்ட 13 வாக்குச்சாவடிகளிலும் நாளை வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது.

newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP