மாயாவதி கட்சியுடனான கருத்து வேறுபாடுகள் களையப்படும் - ம.பி. முதல்வர் கமல்நாத்

மத்தியப் பிரதேச அரசுக்கு அளித்து வரும் ஆதரவை திரும்பப் பெற வேண்டியிருக்கும் என்று மாயாவதி எச்சரிக்கை விடுத்தார். இந்நிலையில், பகுஜன் சமாஜ் கட்சி உடனான கருத்து வேறுபாடுகள் களையப்படும் என்று முதல்வர் கமல்நாத் கூறியுள்ளார்.
 | 

மாயாவதி கட்சியுடனான கருத்து வேறுபாடுகள் களையப்படும் - ம.பி. முதல்வர் கமல்நாத்

மாயாவதியின் பகுஜன் சமாஜ் கட்சியுடனான கருத்து வேறுபாடுகள் களையப்படும் என்று காங்கிரஸ் மூத்த தலைவரும், மத்தியப் பிரதேச முதல்வருமான கமல்நாத் தெரிவித்துள்ளார்.

மக்களவைத் தேர்தல் நடைபெற்று வரும் நிலையில், மத்தியப் பிரதேச மாநிலத்தில் களமிறக்கப்பட்ட பகுஜன் சமாஜ் கட்சி வேட்பாளர் ஒருவர், காங்கிரஸ் கட்சிக்குத் தாவினார். இதனால், மாநில அரசுக்கு அளித்து வரும் ஆதரவை திரும்பப் பெறுவது குறித்து பரிசீலிக்க வேண்டியிருக்கும் என்று மாயாவதி எச்சரிக்கை விடுத்தார்.

இந்நிலையில், பகுஜன் சமாஜ் கட்சி உடனான கருத்து வேறுபாடுகள் களையப்படும் என்று கமல்நாத் கூறியுள்ளார். இரு கட்சிகளின் இலக்கு, கொள்கை எல்லாம் ஒன்றுதான் என்றும், பாஜகவை தூக்கியெறிவதே இருவருக்குமான பொது நோக்கம் என்றும் கமல்நாத் தெரிவித்துள்ளார்.

newstm.in
 

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP