தேர்தல் ஆணையத்தை சாடிய முதல்வர்!

மேற்கு வங்க மாநிலத்தில் தேர்தல் பிரச்சாரத்தை முன்கூட்டியே முடித்து கொள்ள தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது சட்டத்துக்கும், ஜனநாயகத்துக்கும் எதிரான நடவடிக்கை என்று அந்த மாநில முதல்வர் மம்தா பானர்ஜி விமர்சித்துள்ளார்.
 | 

இதுகுறித்து அவர், செய்தியாளர்களிடம் மேலும் கூறும்போது, "மேற்கு வங்கத்தில் பிரதமர் மோடி நாளை இரண்டு பொதுக்கூட்டங்களில் பங்கேற்கிறார். அந்தக் கூட்டங்களுக்கு மட்டும் அவகாசம் அளிக்கும் விதத்தில்,  ஒருதலைப்பட்சமாக ஆணையம் இவ்வாறு முடிவெடுத்துள்ளது" என கூறினார்.

ஆளுநர் அறிக்கை : இதனிடையே, மேற்கு வங்கத்தில் நேர்மையான, சுதந்திரமான தேர்தல் நடைபெற வாய்ப்பில்லை எனக் கூறி, அந்த மாநில ஆளுநர் கேசரிநாத் திரிபாதி, மத்திய உள்துறை அமைச்சகத்துக்கு அறிக்கை அனுப்பியுள்ளார்.

 newstm.in
 
newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP