அகிலேஷ்-மாயாவதி கூட்டணியால் பா.ஜ.க.வுக்கு பாதிப்பில்லை - மத்திய அமைச்சர் நம்பிக்கை

உத்தரப் பிரதேசத்தில் அகிலேஷ் யாதவும், மாயாவதியும் கூட்டணி வைத்திருப்பதால் பா.ஜ.க.வின் வெற்றி பாதிக்கப்படாது. மத்திய அரசின் நலத்திடங்களே எங்களுக்கு வெற்றியை பெற்றுத் தரும் என்று மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் தெரிவித்தார்.
 | 

அகிலேஷ்-மாயாவதி கூட்டணியால் பா.ஜ.க.வுக்கு பாதிப்பில்லை - மத்திய அமைச்சர் நம்பிக்கை

உத்தரப் பிரதேச மாநிலத்தில் அகிலேஷ் யாதவ் தலைமையிலான சமாஜ்வாதி கட்சியும், பகுஜன் சமாஜ் தலைமையிலான பகுஜன் சமாஜ் கட்சியும் கூட்டணி வைத்திருப்பதால், நாடாளுமன்றத் தேர்தலில் பா.ஜ.க.வுக்கு எந்தவித பின்னடைவும் ஏற்படாது என்று மத்திய ரயில்வே துறை அமைச்சர் பியூஷ் கோயல் தெரிவித்தார்.

இதுகுறித்து மும்பையில் அவர் செய்தியாளர்களிடம் நேற்று பேசும்போது, “சமாஜ்வாதி-பகுஜன் சமாஜ் கூட்டணியால் பா.ஜ.க.வுக்கு ஆபத்தில்லை. கடந்த 2014ம் ஆண்டில் பெற்றதைப் போலவே இந்த முறையும் பா.ஜ.க. வெற்றி பெறும் என்பதை கள நிலவரங்கள் வெளிப்படுத்துகின்றன. இந்த மாநிலத்தில் 51 சதவீத வாக்குகளைப் பெறும் நோக்கில் நாங்கள் செயல்பட்டு வருகிறோம்.

நடைபெறவுள்ள நாடாளுமன்றத் தேர்தல், மத்திய அரசின் வளர்ச்சித் திட்டங்களுக்குவெற்றியை பெற்றுக் கொடுப்பதாக இருக்கும். ஏழைகளுக்கு ரூ.5லட்சம் வரையிலான மருத்துவக் காப்பீட்டை வழங்கும் ஆயுஷ்மான் பாரத் திட்டம், இலவச கழிவறை, இலவச சமையல் எரிவாயு இணைப்பு போன்ற எண்ணற்ற நலத்திட்டங்களை அரசு செயல்படுத்தியிருக்கிறது’’ என்றார். உத்தரப் பிரதேசத்தில் மொத்தம் 80 தொகுதிகள் உள்ளன. அதில், சமாஜ்வாதி கட்சியும், பகுஜன் சமாஜ்வாதி கட்சியும் தலா 38 தொகுதிகளில் போட்டியிடுவது என முடிவு செய்துள்ளன.

newstm.in
 

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP