மகாராஷ்டிரா அரசியல் : இணையுமா சிவசேனா - தேசியவாத காங்கிரஸ் கட்சி ??

மகாராஷ்டிரா மாநிலத்தில், குடியரசுத் தலைவரின் ஆட்சி அமல்படுத்தபட்டதை தொடர்ந்து, ஆட்சியை பிடிப்பதற்காக தற்போது தேசியவாத காங்கிரஸ் கட்சியுடன் கலந்துரையாடலில் ஈடுபடவுள்ளதாக கூறியுள்ளார் சிவசேனா கட்சி தலைவர் உத்தவ் தாக்கரே.
 | 

மகாராஷ்டிரா அரசியல் : இணையுமா சிவசேனா - தேசியவாத காங்கிரஸ் கட்சி ??

மகாராஷ்டிரா மாநிலத்தில், குடியரசுத் தலைவரின் ஆட்சி அமல்படுத்தபட்டதை தொடர்ந்து, ஆட்சியை பிடிப்பதற்காக தற்போது தேசியவாத காங்கிரஸ் கட்சியுடன் கலந்துரையாடலில் ஈடுபடவுள்ளதாக கூறியுள்ளார் சிவசேனா கட்சி தலைவர் உத்தவ் தாக்கரே.

மகாராஷ்டிரா மாநில தேர்தலை தொடர்ந்தும், பாஜக-சிவசேனா வெற்றி கூட்டணியிடையான கருத்த வேறுபாடுகளினால் ஆட்சி அமைப்பதில் சிக்கல் நீடித்து வந்தது. இந்நிலையில், அம்மாநில ஆளுநர் பகத் சிங் கோஷ்யாரி தேர்தலில் வெற்றி பெற்றுள்ள பாரதிய ஜனதா-சிவசேனா கட்சிகள் உட்பட போட்டியிட்ட காங்கிரஸ் மற்றும் தேசியவாத காங்கிரஸ் கட்சிகளையும் பெரும்பாண்மையை நிரூபித்து ஆட்சி அமைக்குமாறு அழைப்பு விடுத்திருந்தார். 

எனினும், 105 இடங்களுடன் அம்மாநிலத்தில் முன்னிலை வகிக்கும் பாஜகவிற்கு, ஆட்சி அமைக்க 45 இடங்கள் தேவையென்ற நிலையில், எதிர்கட்சி இருக்கையில் அமர தயாராகிவிட்டது. இதை தொடர்ந்து, குறிப்பிட்ட நேரத்திற்குள் சிவசேனா பெரும்பாண்மையை நிரூபிக்கவில்லை என்று கூறிய அம்மாநில ஆளுநர் பகத் சிங் கோஷ்யாரிடம் கூடுதலாக 3 நாட்கள் அவகாசம் அளிக்குமாறு சிவசேனா தரப்பில் கோரிக்கை விடுக்கப்பட்டும் அதை ஏற்க மறுப்பு தெரிவித்து விட்டார் ஆளுநர் கோஷ்யாரி.  

இந்நிலையில், குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் அவர்களின் ஒப்புதலுடன் நேற்று மகாராஷ்டிராவில் குடியரசுத் தலைவரது ஆட்சி அமல்படுத்தபட்டது. இதை தொடர்ந்து, தற்போது காங்கிரஸ் மற்றும் தேசியவாத காங்கிரஸ் கட்சிகளுடன் பேச்சு வார்த்தையில் ஈடுபட்டிருக்கிறது சிவசேனா. இது குறித்த பத்திரிகையாளர்களின் கேள்விகளுக்கு பதிலளித்த உத்தவ் தாக்கரே, என்.சி.பி கட்சிக்கும் தங்களுக்கும் இடையே சில விஷயங்கள் மாற்று கருத்துக்கள் இருப்பதாகவும், அவை அனைத்தையும் பேசி சரி செய்த பின்னர் ஆட்சி அமைப்பது குறித்து அறிவிப்பதாகவும் குறிப்பிட்டுள்ளார். 

இவரை தொடர்ந்து, மக்களின் கோரிக்கையை ஏற்று, எதிர்கட்சி இருக்கையில் அமர தயாராகவிருப்பதாக கூறிவந்த தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத் பவார், காங்கிரஸுடன் கலந்துரையாடிய பின்னர் சிவசேனா குறித்த ஒரு தீர்மானத்திற்கு வருவிருப்பதாக கூறியுள்ளார்.  

Newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP