Logo

மகாராஷ்டிரா : சிவசேனா தலைமையிலான ஆட்சியில் முதலமைச்சர் யார் ??

மகாராஷ்டிரா மாநிலத்தில் சிவசேனா தலைமையிலான ஆட்சி அமைக்கப்படுவது உறுதி என்ற சஞ்சய் ராவுத்தின் அறிவிப்பை தொடர்ந்து, சிவசேனா தலைவர்களில் முதலமைச்சர் பதவியில் அமரப்போகும் தலைவர் யாராக இருக்கக்கூடும் என்ற கேள்வி தற்போது எழுந்துள்ளது.
 | 

தேசியவாத காங்கிரஸ் உடனான தாக்கரேக்களின் சந்திப்பை தொடர்ந்து, மகாராஷ்டிரா மாநிலத்தில் சிவசேனா தலைமையிலான ஐந்து வருட ஆட்சி அமைக்கப்படுவது உறுதி என்று கூறியிருந்தார் சஞ்சய் ராவுத். இதை தொடர்ந்து, சிவசேனா கட்சி தலைவர்களில் முதலமைச்சர் பதவியில் யார் அமர்த்தப்படுவார் என்ற எதிர்பார்ப்பு தற்போது எழுந்துள்ளது. அனைத்து கட்சி தரப்பிலும் ஏற்று கொள்ளும் சிவசேனா தலைவர் உத்தவ் தாக்கரே தான் என்றாலும், அவருக்கு முதலமைச்சர் பதவியில் அமர்ந்து ஆட்சி புரியும் எண்ணமில்லை என்று கூறப்படுகின்றது. 

கட்சியில் உள்ள சில முக்கிய தலைவர்களுக்கு சிவசேனாவின் காங்கிரஸ் மற்றும் தேசியவாத காங்கிரஸுடன் இணைப்பு விருப்பமில்லாத நிலையில், பதவியில் அமர யாரும் தயாராக இல்லை என்று கூறப்படுகின்றது. இந்நிலையில், ஏக்நாத் ஷின்டே, சுபாஷ் தேசாய் மற்றும் அரவில்த் சவாந்த் ஆகிய மூவரில் ஒருவர் முதலமைச்சர் பதவியில் அமர்த்தப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகின்றது. 

எதுவாக இருந்தாலும், இன்று மூன்று கட்சிகளின் முக்கிய தலைவர்களும் இன்று சந்திக்க உள்ள நிலையில், இந்த சந்திப்பை தொடர்ந்து, ஆட்சி குறித்த அனைத்து குழப்பங்களும் இன்றுடன் முடிவடையும் என்றும் ஆட்சி அமைப்பு குறித்தும் இன்றே அறிவிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகின்றது.

Newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP