ஜார்க்கண்ட் மாநில தேர்தல் : மகாராஷ்டிராவின் நிலை ஜார்க்கண்டிலும் தொடர விட மாட்டோம் - பாஜக தலைவர்கள் திட்டவட்டம்!!

ஜார்க்கண்ட் மாநில சட்டப்பேரவை தேர்தலுக்கான நாள் பெருங்கி கொண்டிருக்கும் நேரத்தில், கூட்டணி கட்சிகளான பாரதிய ஜனதா கட்சிக்கும், அனைத்து ஜார்க்கண்ட் மாணவர் சங்கத்திற்க்கும் இடையே கருத்து வேறுபாடுகள் நிலவி வருவதாக கூறப்படுவதை தொடர்ந்து, மகாராஷ்டிராவின் நிலை ஜார்க்கண்டில் நிச்சயமாக தொடராது என்று திட்டவட்டமாக கூறியுள்ளனர் அம்மாநில பாஜக தலைவர்கள்.
 | 

ஜார்க்கண்ட் மாநில சட்டப்பேரவை தேர்தல், வரும் நவம்பர் 30 முதல் டிசம்பர் 23 வரை 5 கட்டமாக நடைபெறவுள்ளதை தொடர்ந்து, தேசிய ஜனநாயக கூட்டணி, ஜனதா தால் மற்றும் லோக் ஜான்ஷக்தி கட்சி ஆகிய மூன்றும் தனித்தனியே போட்டியிடவிருப்பதாக அறிவித்துள்ளது. 

இதனிடையில், கடந்த 2014ஆம் சட்டப்பேரவை தேர்தலில் கூட்டணி கட்சிகளாக இணைந்து போட்டியிட்ட பாரதிய ஜனதா கட்சி மற்றும் அனைத்து ஜார்க்கண்ட் மாணவர் சங்கம் இரண்டும் இத்தேர்தலிலும் இணைந்து போட்டியவிருப்பதாக அறிவிக்கப்பட்டிருக்கும் நிலையிலும், இவ்விரு கட்சிகளுக்கும் இடையே கருத்து வேறுபாடுகள் நிலவி வருவதாக தற்போதைய தகவல்கள் தெரிவிக்கின்றன.

மகாராஷ்டிரா மாநிலத்தில் கூட்டணியாக இணைந்து போட்டியிட்ட பாஜ-சிவசேனா கட்சிகளிடையே ஏற்பட்ட கருத்து வேறுபாடுகளினால், தேர்தலில் வெற்றி பெற்றுள்ள போதும், கூட்டணியை கலைத்து, எதிர்கட்சியில் அமரும் நிலைக்கு தள்ளப்பட்டிருக்கிறது பாஜக. இந்நிலையில், ஜார்க்கண்ட் மாநிலத்திலும் இத்தகைய பிரச்சனைகள் தொடருமா என்று எழுந்துள்ள கேள்விக்கு, தேர்தலுக்கு முன்னர் வைக்கப்படும் ஒவ்வொரு அடியையும் மிக தெளிவாக வைக்கவே முடிவு செய்திருப்பதாகவும், மகாராஷ்டிராவில் சந்தித்த இழப்பை ஜார்க்கண்ட் மாநிலத்திலும் தொடரவிடாமல் கவனமாக முடிவெடுக்கவுள்ளதாகவும் தெரிவித்துள்ளனர் அம்மாநில பாஜக தலைவர்கள்.

இதனிடையில், அம்மாநிலத்தில் தற்போதைய முதலமைச்சராக இருக்கும் பாஜக தலைவர் ரகுபர்தாஸிற்கு எதிரான சில கருத்துக்களை அக்கட்சி உறுப்பினர்கள் சிலரே முன்வைப்பதை தொடர்ந்து, ஜார்க்கண்ட் தேர்தலில் வெற்றி பெற்றாலும் ரகுபர்தாஸே முதலமைச்சர் பதவியில் மீண்டும் அமர்த்தப்படுவாரா என்ற சந்தேகம் தற்போது எழுந்துள்ளது.

Newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP