ஜார்க்கண்ட் மாநில சட்டப்பேரவை தேர்தல் - முதலமைச்சர் ரகுபர்தாஸ், அமித் ஷா சந்திப்பு!!!

ஜார்க்கண்ட் மாநில சட்டப்பேரவை தேர்தலுக்கான தேதிகள், இந்த மாத தொடக்கத்தில் அறிவிக்கப்பட்டதைதொடர்ந்து, அம்மாநில முதலமைச்சர் ரகுபர் தாஸ், உள்துறை அமைச்சர் அமித் ஷாவை நேரில் சந்தித்து, போட்டியிடப்போகும் வேட்பாளர்கள் குறித்த கலந்துரையாடலில் ஈடுபட்டுள்ளார்.
 | 

81 தொகுதிகள் கொண்டுள்ள ஜார்க்கண்ட் மாநில சட்டப்பேரவை தேர்தல் வரும் நவம்பர் 30 முதல் டிசம்பர் 23 வரை 5 கட்டமாக நடைபெறவுள்ளதாக தலைமை தேர்தல் ஆணையர் சுனில் அரோராஅறிவித்திருந்ததை தொடர்ந்து, தேர்தலில் போட்டியப்போகும் வேட்பாளர்களின் பட்டியலை தயார் செய்யும் வேலைகளில் ஈடுபட்டுள்ளனர் அம்மாநில பாரதிய ஜனதா கட்சியினர்.

இதை தொடர்ந்து, அம்மாநில முதலமைச்சர் ரகுபர்தாஸூம், மற்ற பாஜக கட்சி தலைவர்களும் வியாழக்கிழமையான நேற்று, உள்துறை அமைச்சரான அமித் ஷாவை நேரில் சந்தித்து கலந்துரையாடியுள்ளனர். இந்த சந்திப்பை தொடர்ந்து, ஏற்கனவே தேர்வு செய்யப்பட்டிருந்த 15 வேட்பாளர்கள், நீண்ட நேர கலந்துரையாடலுக்கு பின்னர் 5 வேட்பாளர்களாக குறைந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

மேலும், ஜார்க்கண்ட் மாநில ரகுபர்தாஸ் தலைமையிலான பாரதிய ஜனதா கட்சியின் ஆட்சி வரும் ஜனவரி 5ஆம் தேதியுடன் முடிவடைய உள்ளது குறிப்பிடத்தக்கது.

Newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP