Logo

பாகிஸ்தானுக்கு ஆதரவளிக்கும் துருக்கி தேசத்தில் கட்சி அலுவலகம் திறந்துள்ள இந்திய தேசிய காங்கிரஸ்!!!

ஜக்கிய நாடுகளின் பொது சபை மாநாட்டில், இந்தியாவின் ஜம்மு காஷ்மீர் விவகாரத்தில் பாகிஸ்தானிற்கு ஆதரவாக கருத்து தெரிவித்த துருக்கி நாட்டில், இந்திய தேசிய காங்கிரஸ் கட்சி அலுவலகம் திறந்திருப்பது இந்தியர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
 | 

ஜம்மு காஷ்மீரின் சிறப்பு அந்தஸ்தை திரும்ப பெற்று அதை 2 யூனியன் பிரதேசங்களாக பிரிக்க உத்தரவு பிறப்பித்திருந்த மத்திய அரசின் முடிவுக்கு எதிராக கடந்த செப்டம்பர் மாதம் 27ஆம் தேதியன்று அமெரிக்காவின் நியூயார்க் நகரில் நடைபெற்ற ஜக்கிய நாடுகளின் பொது சபை மாநாட்டில் கருத்து தெரிவித்திருந்தது பாகிஸ்தான்.

இதை தொடர்ந்து, பாகிஸ்தானின் கருத்துக்களுக்கு ஆதரவளிக்கும் வகையில், ஜம்மு காஷ்மீர் விவகாரத்தில் இரு தரப்பினரும் கலந்துரையாடிய பின்னரே ஓர் தீர்மானத்திற்கு வரவேண்டுமே தவிர இப்படி ஒருதரப்பினர் மட்டும் முடிவெடுக்க கூடாது என்று கூறியிருந்தார் துருக்கி அதிபரான ரிசப் தயிப் எர்டகான். 

இந்தியாவின் உள்நாட்டு விவகாரத்தில் தேவையில்லாமல் மூக்கை நுழைக்கும் பாகிஸ்தானிற்கு ஆதரவளிக்கும் வகையிலான துருக்கி அதிபரின் கருத்தினால் அதிருப்தியடைந்த பிரதமர் மோடி, துருக்கியுடன் பிரச்சனையில் ஈடுபட்டுள்ள க்ரீஸ், சிப்ரஸ் மற்றும் அர்மேனியா போன்ற நாடுகளின் தலைவர்களை சந்தித்து பேச்சு வார்த்தை மேற்கொண்டிருந்தார். இதனால் கலவரமடைந்த துருக்கி பின்பு இந்தியா பாகிஸ்தான் விவகாரத்தினுள் நுழையவே இல்லை. 

இந்நிலையில், இந்தியாவின் முக்கிய அரசியல் கட்சிகளுள் ஒன்றான இந்திய தேசிய காங்கிரஸ், துருக்கியுடனான உறவை மேம்படுத்துவதாக கூறி இந்திய வெளிநாட்டு காங்கிரஸின் ஓர் கிளையை இஸ்தான்புல்லில் தொடங்கியுள்ளது.

பாகிஸ்தானின் ஆதரவளராக வலம் வந்த துருக்கியில், காங்கிரஸ் கட்சி கிளை தொடங்கியுள்ளது இந்தியர்களிடையே சர்ச்சையை கிளப்பியுள்ளது. 

Newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP