தும்பை விட்டு வாலைப் பிடித்ததா ஹரியானா பாஜக!

இருப்பவனை காக்க வைத்து, வந்தவனுக்கு விருந்து வைத்த நிலைப்பாட்டால் தான் இந்த நிலைக்கு பாஜக தள்ளப்பட்டுள்ளது. இது ஹரியானாவில் மட்டும் அல்ல இது போன்ற நிலைப்பாட்டை எடுக்கும் அனைத்து மாநிலங்களில் பாஜக சந்திக்க வேண்டி இருக்கும். இதை புரிந்து கொண்டு நடவடிக்கை எடுக்க அந்த கட்சி முன்வர வேண்டும்.
 | 

தும்பை விட்டு வாலைப் பிடித்ததா ஹரியானா பாஜக!

பைபிளில் கெட்ட குமாரன் கதை சிறப்பானது. தந்தைக்கு 2 மகன்கள், ஒருவர் தந்தையிடம் சொத்துக்களை பிரித்து வாங்கி கொண்டு சென்று விடுவான்; மற்றொருவன் தந்தையிடமே வாழ்ந்து அவர் விருப்பத்தை நிறைவேற்றுவான். பிரிந்து சென்ற மகன் சொத்துக்களை எல்லாம் இழந்து திரும்பி வரும் போது தந்தை அவனுக்காக விருந்து வைத்து வரவேற்பார். இப்படியான அந்த கதைக்கு யார் பொருத்தமாக இருக்கிறார்களோ  இல்லையோ ஹரியானா பாஜக மிகப் பொருத்தமாக இருக்கிறது.

ஆளும் கட்சியாக இருப்பதால் எதிர்ப்பையும் மீறி சட்டசபைத் தேர்தலில வெற்றி பெற வேண்டிய கட்டாயம் பாஜகவிற்கு. அதே நேரத்தில் ராகுல், சோனியாவின் அரசில் நடவடிக்கைகள், காங்கிரஸ் கட்சியினர் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. இப்படி 2 கட்சியிலும், கொள்கை இல்லாமல் அரசியல் மட்டுமே செய்பவர்கள் காங்கிரஸ்.

பாஜகவிற்கு, எப்படியாவது வெற்றி பெற வேண்டும் என்ற நிலை. காங்கிரஸ் கட்சியில் சிலருக்கோ எந்த கட்சியில் இருந்தாலும் பதவியில் இருக்க வேண்டும் என்ற எண்ணம். இவர்கள் காங்கிரஸ் கட்சியில் இருந்து விலகி பாஜகவில் சேர்க்கிறார்கள்.

பாஜகவில் அது வரையில் கொள்கை பிடிப்போடு, தங்களுக்கு சட்டசபைத் தேர்தலில் போட்டியிட வாய்ப்பு கிடைக்கும் என்று எதிர்பார்த்திருந்தவர்கள் ஏமாறும் வகையில் கட்சி மாறிவந்தவர்கள் சீட் பெறுகிறார்கள்.

இதனால் சிலர் ஆத்திரமடைந்து வெளியேறி, சுயேட்சையாக போட்டியிடுகின்றனர். கட்சிகள் நிலைப்பாடு பற்றி வாக்காளர்களுக்கு கவலையில்லை. அதன் காரணமாக பாஜக, காங்கிரஸ் நிறுத்திய வேட்பாளர்களுக்கு எதிராக பாஜகவில் இருந்து வெளியேறியவர்கள் வெற்றி பெறுகிறார்கள். ஹரியானாவில் சுயேட்சையாக வெற்றி பெட்ரா 7 பேர்களில், 5 பேர் பாஜகவில் இருந்து வெளியேறியவர்கள்.

இவர்களை வெளியே விட்டது பாஜக செய்த மிகப் பெரிய தவறு. ஆனால் கட்சியின் தேர்தல் நிலைப்பாடு மீது கோபம் கொண்டவர்கள் என்பதால் மீண்டும் பாஜகவிற்கு ஆதரவு அளிக்க முன்வந்தனர்.

இவ்வாறு அவர்கள் ஆதரவு அளிக்க முன்வந்ததால், பாஜக ஆட்சி அமைக்க ஒரு சிலர் ஆதரவே தேவை என்ற நிலை ஏற்பட்டது. இதற்கு சோம்பீர் சங்கவான், பால்ராஜ் கண்டு, ரதம்பால் கோண்டர், நைன்பால் ராவத், ராண்டிஹிர் கோலன் ஆகியோர் தங்கள் ஊடல் தீர்ந்து பாஜகவிற்கு ஆதரவு அளித்துள்ளனர்.

அதே போல முன்னாள் துணை பிரதமர் தேவிலாலின் மகன் ரஞ்சித் சிங், ராகேஷ் ஆகிய இரு சுயேட்சைகளும் பாஜகவிற்கு ஆதரவு தெரிவித்தனர். ஹரியானா லோக்கித் கட்சி தலைவர் கோபால் கண்டா, இந்தி தேசிய லோக்தள் கட்சி அபய் சவுதாலா ஆகியோர் பாஜகவிற்கு ஆதரவு தெரிவித்தனர். இவர்கள் ஆதரவே ஆட்சியமைக்க வலிமை வழங்கும் என்பதால், மனோகர் லால் கட்டார் முதல்வராக ஆட்சி அமைக்கும் பணியில் ஈடுபட்டார்.

இதன் காரணமாக பாஜக, காங்கிரஸ் ஆகியவற்றிக்கு அடுத்த இடத்தில், ஜஜக பாஜகவிடம் பேரம் பேச வாய்ப்பு இல்லாமல் போய்விட்டது.

தனித்தனியானவர்களிடம் கூட்டு வைத்துக் கொள்வதும், கோபால் கண்டாவின் ஆதரவை ஏற்பதில் உருவானக கருத்து வேறுபாடு போன்றவை பாஜகவை ஜஜகவுடன் கூட்டணி வைத்துக் கொள்ள வேண்டிய கட்டாயத்தை ஏற்படுத்தியது. 

தற்போது ஓம்பிரகாஷ் சவுதாலா பேரன் துஷ்யந்த் சவுதாலா தொடங்கிய ஜஜகவுன் கூட்டணி அமைத்து ஆட்சியை பிடித்து இருக்கிறது பாஜக.

தேவிலால் இருந்த போதே அவருடன்  இணைந்து அரசியல் செய்த பாஜகவிற்கு, அவரது கொள்ளுபேரனுடன் அரசியல் செய்வது எளிது.

ஆனால் இருப்பவனை காக்க வைத்து, வந்தவனுக்கு விருந்து வைத்த நிலைப்பாட்டால் தான் இந்த நிலைக்கு பாஜக தள்ளப்பட்டுள்ளது. இது ஹரியானாவில் மட்டும் அல்ல இது போன்ற நிலைப்பாட்டை எடுக்கும் அனைத்து மாநிலங்களில் பாஜக சந்திக்க வேண்டி இருக்கும். இதை புரிந்து கொண்டு நடவடிக்கை எடுக்க அந்த கட்சி முன்வர வேண்டும்.

newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP