Logo

2019 தேர்தலுக்கு முன் வாக்கு இயந்திரங்கள் ரெடியாகுமா?

2019ம் ஆண்டு நடைபெறவிருக்கும் நாடாளுமன்ற தேர்தலுக்கு முன்னதாக, VVPAT மின்னணு வாக்கு இயந்திரங்களை உற்பத்தி செய்வதில் தாமதம் ஏற்பட்டுள்ளதாக தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.
 | 

2019 தேர்தலுக்கு முன் வாக்கு இயந்திரங்கள் ரெடியாகுமா?

2019ம் ஆண்டு நடைபெறவிருக்கும் நாடாளுமன்ற தேர்தலுக்கு முன்னதாக, VVPAT மின்னணு வாக்கு இயந்திரங்களை உற்பத்தி செய்வதில் தாமதம் ஏற்பட்டுள்ளதாக தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. 

வாக்காளர்கள், தாங்கள் பதிவு செய்யும் ஓட்டை சரிபார்த்துக் கொள்ளும் வசதி கொண்ட VVPAT மின்னணு வாக்கு இயந்திரங்களை அடுத்த நாடாளுமன்ற தேர்தலுக்குள் முழுமையாக ஈடுபடுத்த தேர்தல் ஆணையம் திட்டமிட்டது. இந்நிலையில், இந்த ஆண்டு செப்டம்பர் மாதத்துக்குள் நாடு முழுவதும் தேர்தல் நடத்த தேவையான வாக்கு இயந்திரங்கள் உற்பத்தி செய்து தயார்படுத்தப்படும் என தெரிவித்திருந்தனர். ஆனால், சமீபத்தில் வெளியான தகவலின் படி, இயந்திரங்கள் உற்பத்தி மிகவும் பின்தங்கி இருப்பதாக தெரிய வந்தது. 

இதையடுத்து, அடுத்த தேர்தலுக்குள், தேவையான அளவு இயந்திரங்கள் தயாரகுமா என்ற கேள்வி எழுந்தது. இந்த விவகாரம் குறித்து நேற்று அறிக்கை வெளியிட்டுள்ள தேர்தல் ஆணையம், தாமதம் ஏற்பட்டது உண்மை தான் என ஒப்புக்கொண்டுள்ளது. செப்டம்பர் மாதத்திற்குள் 16.15 லட்சம் இயந்திரங்களை உற்பத்தி செய்ய தேர்தல் ஆணையம் ஒப்பந்தம் போட்டிருந்தது. ஆனால், ஜூன் மாதம் 19ம் தேதி வரை வெறும் 3.48 லட்சம் வாக்கு இயந்திரங்கள் மட்டுமே தங்கள் கையில் கிடைத்ததாம். ஆனால், தற்போது வெளியிடப்பட்டுள்ள அறிக்கையின் படி, 5.88 லட்சம் இயந்திரங்கள் தயாராகியுள்ளதாக தேர்தல் ஆணையம் கூறியுள்ளது. 

தாமதம் ஏற்பட்டால் கூட, நவம்பர் மாதத்திற்குள் அனைத்து வாக்கு இயந்திரங்களும் தயாராகிவிடும் என உறுதியளித்துள்ளனர். பெங்களூரில் உள்ள பாரத் எலெக்ட்ரானிக்ஸ் மற்றும் ஹைதராபாத்தில் உள்ள எலெக்ட்ரானிக்ஸ் கார்ப்பரேஷன் ஆப் இந்தியா, ஆகிய நிறுவனங்கள் VVPAT இயந்திரங்கள் உற்பத்தியில் ஈடுபட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP