Logo

மாநிலங்களவை மார்ஷல்களின் சீருடை மாற்றப்பட்டது ஏன் ??

ராஜ்யசபா மார்ஷல்களின் சீருடைகள் மாற்றப்பட்டிருப்பதிற்கு பல தரப்பினரும் எதிர்ப்பு தெரிவித்து வரும் நிலையில், கடந்த செவ்வாயன்று அதை மறுஆய்வு செய்ய உத்தரவு பிறப்பித்துள்ளார் மாநிலங்களவை தலைவரான எம்.வெங்கய்யா நாயுடு.
 | 

மாநிலங்களவை மார்ஷல்களின் சீருடை மாற்றப்பட்டது ஏன் ??

ராஜ்யசபா மார்ஷல்களின் சீருடைகள் மாற்றப்பட்டிருப்பதிற்கு பல தரப்பினரும் எதிர்ப்பு தெரிவித்து வரும் நிலையில், கடந்த செவ்வாயன்று அதை மறுஆய்வு செய்ய உத்தரவு பிறப்பித்துள்ளார் மாநிலங்களவை தலைவரான எம்.வெங்கய்யா நாயுடு.

நாடாளுமன்ற குளிர்கால கூட்டுத்தொடர் கடந்த 18ஆம் தேதி தொடங்கியதை தொடர்ந்து,மாநிலங்களவை மார்ஷல்கள்களின் சீருடைகள் மாற்றப்பட்டிருந்தது. இதற்கு ராணுவ அதிகாரிகல், எதிர்கட்சிகள் உட்பட பல தரப்பினரும் எதிர்ப்பு தெரிவித்தனர். இதை தொடர்ந்து, சீருடை மாற்றப்பட்டதை மறுஆய்வு செய்யுமாறு உத்தரவு பிறப்பித்துள்ளார் எம்.வெங்கய்யா நாயுடு.

மாநிலங்களவை மார்ஷல்கள் கடந்த 50 வருடங்களாக வெள்ளை நிற சீருடையையே அணிந்து வருகின்றனர். இவர்கள் அவையின் தலைவர், துணைத் தலைவர் மற்றும் துணைத் தலைவர்கள் என அனைவருக்கும் சபையின் நடவடிக்கைகளில் உதவியாக இருந்து வருகிறார்கள். 

1965ஆம் ஆண்டு முதல் மாற்றப்படாமல் இருந்த சீருடைகள் தற்போது மாற்றப்பட்டதற்கு காரணம் இருப்பதாக கூறப்படும் நிலையில், சுமார் 50 ஆண்டுகளாக இதே சீருடையை அணிந்து வரும் அதிகாரிகளுக்கே ஓர் மாற்றம் தேவைப்பட்டதாக கூறப்படுகின்றது. மேலும், மார்ஷல்களுக்கு கீழ் வேலை செய்பவர்களுக்கும் இதே போன்ற இதே நிற சீருடை என்பதினால் அதிகாரிகள் அதிருப்தியில் உள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதை தொடர்ந்தே, இன்றைய காலகட்டதிற்கு ஏற்ப சீருடைகளை மாற்றியமைக்க முடிவு செய்யப்பட்டதாக கூறப்படுகின்றது.

இதற்கு பலரும் எதிர்ப்பு தெரிவிப்பதற்கான காரணங்கள் : மார்ஷல்களின் தற்போதைய உடை ராணுவ அதிகாரிகளின் சீருடை போன்று உள்ளதாகவும், ராணுவ சீருடைகள் போன்ற ஆடைகளை ராணுத்தினர் இல்லாது பிறர் உடுத்துவது பாதுகாப்பு அபாயமாகும் என்றும் ராணுவ அதிகாரிகள் குற்றம் சாட்டியுள்ளனர்.

இது குறித்து மாநிலங்களவையின் முன்னாள் தலைவர் குறிப்பிடுகையில், மாநிலங்களவை மார்ஷல்களின் உடை சிறிது பழமை வாய்ந்ததாக இருந்தாலும், அதுவே ராஜ்யசபையின் மரியாதையை பரைசாற்றும் விதமாக இருந்ததாக கூறியுள்ளார். 

Newstm.in

 

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP