Logo

இந்தியாவின் பாதுகாப்பை உறுதி செய்ய தற்போதைய தேவை என்ன ?? - பிபின் ராவத்

இந்தியாவின் சமீபத்திய தேவைகள் மற்றும் அச்சுறுத்தல்கள் குறித்தும், மேற்கொள்ள வேண்டிய முயற்சிகள் குறித்தும், விரிவாக உரையாற்றியுள்ளார், 23வது ப்யாராலால் நினைவு விரிவுரை நிகழ்வில் கலந்து கொண்ட இந்திய ராணுவ அதிகாரி பிபின் ராவத்.
 | 

இந்தியாவின் பாதுகாப்பை உறுதி செய்ய தற்போதைய தேவை என்ன ?? - பிபின் ராவத்

இந்தியாவின் சமீபத்திய தேவைகள் மற்றும் அச்சுறுத்தல்கள் குறித்தும், மேற்கொள்ள வேண்டிய முயற்சிகள் குறித்தும், விரிவாக உரையாற்றியுள்ளார், 23வது ப்யாராலால் நினைவு விரிவுரை நிகழ்வில் கலந்து கொண்ட  இந்திய ராணுவ அதிகாரி பிபின் ராவத்.

வளர்ச்சியடைந்த நாடுகள் மற்றும் வளர்ச்சியை நோக்கி பயனித்து வரும் நாடுகள் என அனைத்து நாடுகளுக்கும் ஓரோர் தேவை உள்ளது. தேவைகள் வளர வளர அச்சுறுத்தல்களும் வளர்ந்து வருகிறது. பொருளாதாரம், எரிபொருள் வர்த்தகம், ராஜதந்திரம் என பிற நாடுகளுடன் இந்தியா மேற்கொண்டு வரும் யுத்திகள் அனைத்தும் இந்தியாவின் இன்றைய தேவை மட்டுமல்லாது, வருங்கால தேவைகளை பூர்த்தி செய்வதற்கும் மிக முக்கியமாக அமைகிறது.

இந்த யுத்திகளை தொடர்ந்து, இந்தியாவின் பாதுகாப்பில் கவனம் செலுத்த வேண்டியது தற்போதைய மிக முக்கியமான தேவைகளுள் ஒன்றாகும். ராணுவ திறன்களை வளர்ப்பதும், பிற நாடுகளுடன் இணைந்து இந்தியாவின் பாதுகாப்பு உறவை மேம்படுத்துவதும், நம் நாட்டின் ராணுவ தேவைகளை பூர்த்தி செய்வதில் மிக முக்கிய பங்கு வகிக்கிறது.

எனினும், நம் நாட்டின் பாதுகாப்பை மேம்படுத்த பல வகையான முயற்சிகளை மேற்கொண்டு வரும் இந்திய அரசு, சில வகையான சவால்களையும் சந்திக்க வேண்டி இருக்கிறது. 

முதல் சவாலாக, இந்தியாவில் ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டுக்காக இந்திய அரசு செலவிடும் நிதிதொகை. வளர்ந்த நாடுகளின் தொழில்நுட்பங்களை, நம் நாட்டின் பயன்பாட்டிற்கு கொண்டு வரவேண்டுமெனில் நிறைய தொகைகளை ராணுவ தொழில்நுட்பத்திற்கு மத்திய அரசு ஒதுக்க வேண்டியிருக்கும். ஆனால், நாட்டின் தற்போதைய பொருளாதார நிலையில், இத்தகைய தொகையை ஒதுக்குவது சாத்தியமா என்பது கேள்விக்குறியே.

இரண்டாவதாக, தற்போதைய தொழில்நுட்பங்களை நம் நாட்டில் சொந்தமாக தயாரிக்க போதிய நிதி வசதி இல்லாத நிலையில், பிற நாடுகளில் தயாராகும் தொழில்நுட்பங்களை பெறுவதும் இந்தியாவின் தற்போதைய நிலையில் இயலாத ஒன்றுதான். எனினும், நாம் முக்கியத்துவம் கொடுக்க வேண்டியது நம் பாதுகாப்பை உறுதி செய்யும் தொழில்நுட்பத்திற்கா இல்லை அதனால் இந்தியாவிற்கு ஏற்படவிருக்கும் செலவிற்கா என்பதை நாம் விரைந்து தீர்மானிக்க வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறோம்.

மூன்றாவதாக, பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு அமைப்பில், மத்திய அரசின் தலையீடு. இது குறித்து பேசும் போது மிக முக்கியமான ஒன்றை நாம் கவனிக்க வேண்டும். பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு அமைப்பு தயாரிக்கும் தொழில்நுட்பங்களுக்கு நிதியுதவி செய்வது மட்டும் தான் அரசின் வேலையா, இல்லை, நிதியுதவியுடன் சேர்த்து தொழில்நுட்ப தயாரிப்பிலும் மத்திய அரசின் பங்கு இருக்குமா என்பது. நம்முடைய பாதுகாப்பிற்கு தேவையான தொழில்நுட்பங்களை தனியார் நிறுவனங்களின் உதவியுடன் நாமே தயாரிக்கும் வழிகளையும் ஆராய வேண்டும். தனியார் நிறுவனங்களின் உதவியுடன் தயாரிக்கும் தொழில்நுட்பங்களின் மத்திய அரசின் பங்கும் அமைய பெறுமாறு தயாரிக்க வேண்டும்.

நான்காவது, நமது இந்திய ராணுவத்தின் அமைப்பு. வரும் காலங்களில், போர்களத்தில் மட்டும் போர் புரியும் நிலையை தாண்டி, சைபர் டொமைன் வகையான செயற்கை நுண்ணறிவும் கண்டிப்பாக தேவைப்படும். 

எனினும், எத்தனை வகையான தொழில்நுட்பங்களும், சைபர் வகை அறிவுகளும் அமைய பெற்றாலும், அதை பயன்படுத்தவும், இந்தியாவை பாதுகாக்கவும் இது குறித்த அறிவு கொண்ட ராணுவ வீரர்களும் கண்டிப்பாக வேண்டும். தொழில்நுட்பம் எவ்வளவு வேகமாக வளர்ச்சி கண்டாலும், இந்தியாவின் பாதுகாப்பை உறுதி செய்ய அதை பயன்படுத்தும் திறன் கொண்ட மனிதர்கள் நிச்சயம் தேவை.

Newstm.in

 

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP