இன்று, டாக்டர் அப்துல்கலாமின் 88-வது பிறந்தநாள்

டாக்டர் ஏ.பி.ஜே. அப்துல்கலாமின் 88-வது பிறந்தநாள் இந்திய மக்கள் அனைவராலும் மிக சிறப்பாக கொண்டாடப்பட்டு வருவதை தொடர்ந்து, அவரது வாழ்க்கை வரலாற்றை ஒரு சிறு பகுதியாக இங்கே காணலாம்.
 | 

இன்று, டாக்டர் அப்துல்கலாமின் 88-வது பிறந்தநாள்

டாக்டர் ஏ.பி.ஜே. அப்துல்கலாமின் 88-வது பிறந்தநாள் இந்திய மக்கள் அனைவராலும் மிக சிறப்பாக கொண்டாடப்பட்டு வருவதை தொடர்ந்து, அவரது வாழ்க்கை வரலாற்றை ஒரு சிறு பகுதியாக இங்கே காணலாம்.

டாக்டர் ஏ.பி.ஜே. அப்துல்கலாம், கடந்த 1931 ஆம் ஆண்டு, அக்டோபர் 15 ஆம் தேதியன்று, தமிழ்நாட்டின் ராமேஸ்வரத்தில் பிறந்தார். சிறு வயது முதலே விண்வெளி ஆராய்ச்சியில் அளவில்லா ஈடுபாடும், காதலும் கொண்டிருந்த அவர், இந்தியாவின் ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு அமைப்பில் ஓர் முக்கிய ஆராய்ச்சியாளராகவும், இந்திய விண்வெளி ஆராய்ச்சி மையத்தின் முக்கிய நிர்வாகியாகவும் பணியாற்றினார். 

கடந்த 1998 ஆம் ஆண்டு, இந்தியாவினால் மேற்கொள்ளப்பட்ட பொக்கிரான்-2 அணு ஆய்வு சோதனை உட்பட, பல விண்வெளி ஆராய்ச்சிகளில் முக்கிய பங்கு வகித்திருந்தவர் டாக்டர் அப்துல்கலாம். நம் இந்திய விண்வெளி ஆராய்ச்சிக்கான மிக பெரும் தூண்டுகோலாக இவர் இருந்துள்ளார் என்றால் அது மிகையாகாது.

2002 ஆம் ஆண்டு, இந்தியாவின் 11-வது குடியரசுத் தலைவராக பதவியேற்ற இவரை, இவர் மீதிருந்த அளப்பரியா காதலினால், இந்திய மக்கள் "மக்களின் குடியரசுத் தலைவர்" என்று அன்போடு அழைத்தனர்.

விண்வெளி ஆராய்ச்சி மட்டுமில்லாது, மாணவர்களுக்கான மிக பெரும் வழிக்காட்டியாகவும் இருந்துள்ளார் அப்துல்கலாம். மாணவர்களுக்காக பல சிறப்புரைகள் ஆற்றியுள்ள இவர், கடந்த 2015ஆம் ஆண்டு, ஜூலை 27ஆம் தேதியன்று, மேகாலயா மாநிலம், ஷில்லாங் நகரின் ஐ.ஐ.எம் பல்கலைகழகத்தில்  மேற்கொண்டிருந்த ஒரு சிறப்புரையின் போது ஏற்பட்ட திடீர் மாரடைப்பால், இயற்கை எய்தினார்.

இந்தியாவுக்காக இவர் ஆற்றிய அளப்பரியா தொண்டுகளுக்காக, மத்திய அரசு இவருக்கு, இந்தியாவின் மிகபெரும் விருதான "பாரத் ரத்னா" விருதளித்து பாராட்டியுள்ளது.

Newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP