சத்தீஸ்கரில் நக்சல்கள் எண்ணெய் டேங்கரை வெடிக்க செய்ததில் மூன்று பேர் கொல்லப்பட்டனர்

சத்தீஸ்கர் மாநிலம் கான்கர் மாவட்டத்தில் இன்று வெடிபொருட்கள் மூலம் எண்ணெய் டேங்கரை, நக்சல்கள் வெடிக்க செய்ததில் மூன்று பேர் கொல்லப்பட்டதாக போலீசார் தெரிவித்தனர்.
 | 

கோஸ்ரோண்டா மற்றும் துமாபால் கிராமங்களுக்கு இடையே காலை 11 மணியளவில் டீசல் நிறைந்த டேங்கர் ரவுக்காட் பகுதியில் ரயில் பாதை அமைக்கும் பணியில் ஈடுபட்டிருந்தபோது இந்த சம்பவம் நடந்துள்ளதுள்ளதாக காவல் ஆய்வாளர் விவேகானந்த் சின்ஹா தெரிவித்துள்ளார்.

இந்த குண்டுவெடிப்பில் வாகனத்தின் ஓட்டுநர் உள்பட மூன்று பேர் கொல்லப்பட்டனர் என்றும் காவல் ஆய்வாளர் கூறியுள்ளார். இந்த சம்பவம் குறித்த தகவல் கிடைத்ததும், பாதுகாப்புப் படையினர்  சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று தேடுதல் நடவடிக்கையைத் தொடங்கியுள்ளனர்.

newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP