மின்சார வாகனங்கள் வளர்ச்சிக்கு தனி சட்டம் கிடையாது: மத்திய அரசு

மின்சார வாகனங்கள் வளர்ச்சிக்கு தனி சட்டம் கிடையாது: மத்திய அரசு
 | 

மின்சார வாகனங்கள் வளர்ச்சிக்கு தனி சட்டம் கிடையாது: மத்திய அரசு


மின்சார வாகனங்களை ஊக்குவிக்க போதிய நடவடிக்கைக்கு எடுப்பதாக கூறிவந்த மத்திய அரசு, தற்போது, அதற்காக புதிய சட்டம் எதையும் கொண்டுவரப் போவதில்லை என தெரிவித்துள்ளது நிபுணர்களிடையே குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது. 

பெட்ரோல், டீசல் வாகனங்களை குறைக்க உலகம் முழுவதும் பல முன்னணி நாடுகள் நடவடிக்கை எடுத்து வரும் நிலையில், இந்தியாவிலும் அதுபோன்ற நடவடிக்கை எடுக்கவுள்ளதாக போக்குவரத்துத் துறை அமைச்சர் நிதின் கட்கரி கூறியிருந்தார். 2030ம் ஆண்டுக்குள் நாடு முழுவதும் மின்சார கார்கள் பயன்பாட்டுக்கு வரும் என கூறியிருந்த அவர், அதற்கான சலுகைகள் கொண்டு வரவும், மின்சார கார் தயாரிப்பை ஊக்குவிக்க பல அதிரடி நடவடிக்கைகள் கொண்டு வர உள்ளதாக கூறப்பட்டது.

ஆனால், தற்போது மின்சார கார்களுக்காக புதிய சட்டம் தேவையில்லை என கூறியுள்ளார். இதற்காக திட்டமிட்டு நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்று மட்டும் மத்திய அரசு கூறியுள்ளது. மத்திய அரசின் ஆய்வு நிறுவனம் நிட்டி ஆயோக், தனது வளாகத்தில் மின்சார கார்களை சார்ஜ் செய்யும் இரண்டு தளங்களை அமைத்துள்ளது.

அதை திறந்து வைத்தபோது கட்கரி இவ்வாறு கூறினார். நிட்டி ஆயோக் தலைவர் அமிதாப் காந்த் கன்ட் இதுகுறித்து பேசியபோது, எந்த சட்டமும் கொண்டு வந்து, தொழில்நுட்ப முன்னேற்றத்திற்கு முட்டுக்கட்டை போடா விரும்பவில்லை என கூறினார்.

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP