தமிழ் தலைவர்: கருணாநிதிக்கு அமுல் அஞ்சலி

மறைந்த தி.மு.க தலைவர் கருணாநிதிக்கு அமுல் நிறுவனம் சிறப்பு கார்டூன் வெளியிட்டு அஞ்சலி செலுத்தி உள்ளது.
 | 

தமிழ் தலைவர்: கருணாநிதிக்கு அமுல் அஞ்சலி

மறைந்த தி.மு.க தலைவர் கருணாநிதிக்கு அமுல் நிறுவனம் சிறப்பு கார்டூன் வெளியிட்டு அஞ்சலி செலுத்தி உள்ளது. 

திராவிட முன்னேற்ற கழகத்தின் தலைவர் கருணாநிதி கடந்த 7ம் தேதி மாலை உடல்நலக்குறைவு காரணமாக உயிரிழந்தார். அவரது உடல் மெரினாவில் உள்ள அண்ணா சமாதிக்கு அருகே நல்லடக்கம் செய்யப்பட்டது. அவருக்கு பலரும் அஞ்சலி செலுத்தி வருகின்றனர். 

தமிழ் தலைவர்: கருணாநிதிக்கு அமுல் அஞ்சலி

இந்நிலையில் அமுல் நிறுவனம், கருணாநிதிக்கு அஞ்சலி செலுத்தும் வகையில் கார்டூன் ஒன்றை வெளியிட்டுள்ளது. இதில் 'தமிழ் தலைவர்' என்று கருணாநிதி குறிபிடப்பட்டுள்ளார். மேலும் கருணாநிதிக்கு பின்னால் அவரது தாயாரின் சிலை, திரை மற்றும் புத்தகங்கள் இருக்கின்றனர். தோல்களில் துண்டுடன், நாற்காலியில் அமர்ந்திருக்கும் கருணாநிதியின் கையில் காகிதம் ஒன்று இருப்பது போன்று அந்த ஓவியம் வரையப்பட்டுள்ளது.  இந்த கார்டூன் ஓவியம் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. அமுல் நிறுவனம் தினம் தினம் வெளியிடும் கார்டூன்களுக்கு உலகம் முழுவதும் தனி ரசிகர்களே இருப்பது குறிப்பிடத்தக்கது. 

newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP