Logo

அயோத்தியா வழக்கு தீர்ப்பு : மத்தியஸ்தர்களுக்கு நன்றி தெரிவித்த உச்சநீதிமன்ற நீதிபதிகள்!!!

அயோத்தியா வழக்கில் இன்று தீர்ப்பு வழங்கப்பட்டுள்ள நிலையில், இந்த வழக்கை சுமூகமான முறையில் தீர்த்து வைக்க முயற்சித்த மத்தியஸ்தர்களுக்கு நன்றி தெரிவித்துள்ளது உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் தலைமையிலான அமர்வு.
 | 

அயோத்தியாவில் உள்ள 2.77 ஏக்கர் சர்ச்சைக்குரிய நிலம் யாருக்கு சொந்தம் என்ற கேள்விக்கு பதில் காணும் நோக்கத்துடன் இந்த வழக்கை விசாரிக்க தொடங்கிய உச்ச நீதிமன்றத்தின் ரஞ்சன் கோகாய் தலைமையிலான அரசியல் சாசன அமர்வு, நீதிமன்றத்துக்கு வெளியே மத்தியஸ்தர்கள் மூலம் இந்த விவகாரத்தை தீர்க்க முடியுமா என்ற முயற்சியில் இறங்கியது. 

இதற்காக, ஒய்வுபெற்ற நீதிபதி கலிபுல்லா, வாழும் கலை அமைப்பின் தலைவர் ரவிசங்கர் மற்றும் வழக்கறிஞர் ராம் பஞ்சு ஆகியோர் கொண்ட குழு நியமிக்கப்பட்டது. இதை தொடர்ந்து, சம்பந்தப்பட்ட மனுதாரர்களுடன் பேச்சு வார்த்தையில் ஈடுபட்டிருந்த இந்த குழு, இந்த பிரச்சனையை சுமூகமாக தீர்க்க தன்னால் இயன்ற அளவு பல வகை முயற்சிகளில் ஈடுபட்டிருந்தது. எனினும், அவர்களால் இந்த விவகாரத்தில் ஓர் முடிவுக்கு வர இயலவில்லை. இதற்கு பின்னர் தான் 40 நாட்கள் கலந்துரையாடலில் ஈடுபட்டு ஓர் முடிவுக்கு வந்துள்ளது உச்ச நீதிமன்ற நீதிபதிகள் குழு.

இந்நிலையில், இந்த அமைப்பின் அயராத உழைப்பிற்கும், சுமூகமாக முடிவை எட்ட தன்னால் இயன்ற அளவு முயற்சிகளை மேற்கொண்டதற்காகவும் தனது மனமார்ந்த நன்றியை தெரிவித்துள்ளது ரஞ்சன் கோகாய் தலைமையிலான அமர்வு.

Newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP