ஹெல்மெட் அணியாத இளைஞரை நிறுத்திய காவல்துறைக்கு அதிர்ச்சி!

ஹெல்மெட் அணியாமல் வந்தததால் அபராதம் செலுத்த சொன்ன போக்குவரத்து காவலர்களிடம் ரத்தம் தோய்ந்த கத்தியை எடுத்துக் காண்பித்தார் அந்த இளைஞர். தனது நண்பனை குத்திவிட்டு காவல்துறையிடம் சரண்டைய செல்வதாகத் தெரிவித்தார் அவர்.
 | 

ஹெல்மெட் அணியாத இளைஞரை நிறுத்திய காவல்துறைக்கு அதிர்ச்சி!

கர்நாடக மாநிலம், சிக்கபல்லபுரா என்ற பகுதியில், ஹெல்மெட் அணியாதவர்களைப் பிடிப்பதற்காக வாகன சோதனையில் ஈடுபட்டிருந்த போக்குவரத்து காவல்துறையினருக்கு எதிர்பாராத அதிர்ச்சி காத்திருந்தது. ஹெல்மெட் அணியாத இளைஞர் ஒருவரை அபராதம் செலுத்த அறிவுறுத்தியபோது, தனது நண்பனை கத்தியால் குத்திவிட்டு தப்பியோடி வருவதாக அந்த இளைஞர் தெரிவித்தார்.

26 வயதான சந்தீப் ஷெட்டி என்ற அந்த இளைஞர் ஹெல்மெட் அணியாமல் இரு சக்கர வாகனத்தை ஓட்டி வந்ததும் போக்குவரத்து காவல்துறையினர் தடுத்து நிறுத்தினர். அவரிடம் ரூ.100 அபராதம் செலுத்துமாறும், வாகனத்தின் ஆவணங்களை காண்பிக்குமாறும் அறிவுறுத்தப்பட்டது. ஆனால், தனது பைகளில் இருந்து ரத்தம் தோய்ந்த கத்தி ஒன்றை எடுத்துக் காண்பித்த அவர், தனது நண்பன் தேவராஜை கத்தியால் குத்திவிட்டதாகவும், காவல்துறையிடம் சரணடைவதற்காகவே சென்று கொண்டிருந்ததாகவும் தெரிவித்தார்.

இதையடுத்து காவல்துறைக்கு, போக்குவரத்து காவலர்கள் தகவல் தெரிவித்தனர். அவர்கள் சந்தீப் ஷெட்டியை கைது செய்து, இரு சக்கர வாகனம், கத்தி உள்ளிட்டவற்றை பறிமுதல் செய்தனர். ரியல் எஸ்டேட் தொழிலில் முதலீடு செய்வதற்காக, தேவராஜிடம் ரூ.1 லட்சம் பணம் கொடுத்திருந்ததாகவும், இரண்டு ஆண்டுகள் ஆகியும் அதை திருப்பி தர மறுத்ததால் கத்தியால் குத்தியதாகவும் சந்தீப் ஷெட்டி தெரிவித்தார். இதற்கிடையே பலத்த காயங்களுடன் மீட்கப்பட்ட தேவராஜுக்கு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

newstm.in

 

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP