Logo

பிரதமரின் அனைவருக்கு வீடு வழங்கும் திட்டம்: 2 லட்சத்து 75 ஆயிரம் பேருக்கு மானியம்

பிரதமரின் அனைவருக்கும் வீடு வழங்கும் திட்டத்தின் கீழ் இதுவரை 2 லட்சத்து 75 பேருக்கு மானியம் வழங்கப்பட்டுள்ளதாகவும், இதுவரை 12 லட்சம் வீடுகள் கட்டி பயனாளிகளிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாகவும், மிஸ்ரா தெரிவித்துள்ளார்.
 | 

பிரதமரின் அனைவருக்கு வீடு வழங்கும் திட்டம்: 2 லட்சத்து 75 ஆயிரம் பேருக்கு மானியம்

பிரதமரின் அனைவருக்கும் வீடு வழங்கும் திட்டத்தின் கீழ் 2 லட்சத்து 75 ஆயிரம் பேருக்கு மானியம் வழங்கப்பட்டுள்ளது.

பிரதமரின் அனைவருக்கும் வீடு வழங்கும் திட்டத்தின் கீழ் பொருளாதாரத்தில் பின்தங்கியவர்கள், குறைந்த வருமானம் உள்ளவர்கள், நடுத்தர வருவாய் பிரிவினர் என 3 பிரிவுகளாக வீடுகள் கட்ட உதவி அளிக்கப்படுகிறது. இந்த திட்டத்தின் கீழ் அதிகபட்சமாக பயனாளிகளுக்கு ரூ.2 லட்சத்து 67 ஆயிரம் நிதி உதவி அளிக்கப்படுகிறது.

இது குறித்து மத்திய வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற விவகார செயலாளர் துர்கா ஷங்கள் மிஸ்ரா கூறுகையில், பிரதமரின் அனைவருக்கும் வீடு திட்டத்தின் கீழ் குஜராஜ் நகர்புற மக்கள் அதிகளவில் பயன்பெற்றுள்ளனர். அங்கு 88 ஆயிரம் பேர் மானியம் பெற்றுள்ளனர். தமிழகத்தில் 12 ஆயிரம் பேரும்,  நாடு முழுவதும் 2 லட்சத்து 75 ஆயிரம் பேரும் மானியம் பெற்று உள்ளனர். இந்த திட்டத்தின் கீழ் 80 லட்சம் வீடுகளை கட்ட திட்டமிடப்பட்டு இதுவரை 12 லட்சம் வீடுகள் கட்டி பயனாளிகளிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது, 25 லட்சம் வீடுகள் முடியும் தருவாயில் உள்ளன’ என்றார்.

newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP