Logo

பெட்ரோல் டீசல் உயர்வு என்னை எல்லாம் பாதிக்காது - மத்திய அமைச்சரின் பகீர் பேச்சு!

தினமும் பெட்ரோல் டீசல் விலை உயர்ந்துகொண்டே செல்கிறது.இந்த நிலையில் மத்திய அமைச்சர் ஒருவர் விலை உயர்வால் எனக்கு எந்த எந்த பாதிப்பும் இல்லை என்று கூறியிருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
 | 

பெட்ரோல் டீசல் உயர்வு என்னை எல்லாம் பாதிக்காது - மத்திய அமைச்சரின் பகீர் பேச்சு!

தினமும் பெட்ரோல் டீசல் விலை உயர்ந்துகொண்டே செல்கிறது. இதனால், மக்கள் மிகுந்த பாதிப்புக்கு ஆளாகி உள்ளனர். விலையைக் குறைக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்து வருகின்றனர். இந்த நிலையில் மத்திய அமைச்சர் ஒருவர் விலை உயர்வால் எனக்கு எந்த எந்த பாதிப்பும் இல்லை என்று கூறியிருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மத்திய சமூக நீதி மற்றும் அதிகாரம் அளித்தல் துறை இணை அமைச்சர் ராம்தாஸ் அத்வாலே நிருபர்களிடம் பேசினார். அப்போது, பெட்ரோல் டீசல் விலை உயர்வு குறித்து அவரிடம் கேள்வி எழுப்பினர். அதற்கு அவர், "பெட்ரோல், டீசல் விலை உயர்வால் எனக்கு எந்த பாதிப்பும் இல்லை. ஏனெனில் நான் மத்திய அமைச்சராக இருக்கிறேன். எனக்கு அரசின் சலுகைகள் அனைத்தும் கிடைக்கின்றன. அவற்றைப் பயன்படுத்தி என்னுடைய வாகனங்களுக்கு பெட்ரோல், டீசல் நிரப்பப்படுகிறது. 

இதனால் விலையைப் பற்றியே கவலைப்படுவது இல்லை. இதுவே நான் மத்திய அமைச்சராக இல்லாமல் இருந்திருந்தால், என் அமைச்சர் பதவி பறிபோனால் எரிபொருட்கள் விலை உயர்வு பற்றி கவலைப்பட்டிருப்பேன்" என்றார்.

newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP