Logo

மீண்டும் மோடி: கங்கை நதியில் படகோட்டுபவர்கள் கணிப்பு!

பிரபல ஆங்கில இணைய இதழான வயர் என்ற பத்திரிகையில் ஜாவித் லாய்ட் என்ற பத்திரிகையாளர் அடுத்து ஆட்சி அமைக்கப்போகும் கட்சி அல்லது தலைவர் யார் என்பது குறித்து நாடெங்கிலும் சுற்றுப் பயணம் செய்து ஆய்வு மேற்கொண்டு அதன் முடிவுகளை வெளியிட்டுள்ளார். அதன்படி அடுத்து அமையப்போகும் ஆட்சி தற்போதைய பிரதமர் நரேந்திர தாமோதரதாஸ் தலைமையில்தான் மீண்டும் அமையும் என்று அவர் கருத்து தெரிவித்துள்ளார்.
 | 

மீண்டும் மோடி: கங்கை நதியில் படகோட்டுபவர்கள் கணிப்பு!

பிரபல ஆங்கில இணைய இதழான வயர் என்ற பத்திரிகையில் ஜாவித் லாய்ட் என்ற பத்திரிகையாளர், அடுத்து ஆட்சிய அமைக்கப்போகும் கட்சி அல்லது தலைவர் யார் என்பது குறித்து நாடெங்கிலும் சுற்றுப் பயணம் செய்து ஆய்வு மேற்கொண்டு அதன் முடிவுகளை வெளியிட்டுள்ளார்.

அதன்படி அடுத்து அமையப்போகும் ஆட்சி தற்போதைய பிரதமர் நரேந்திர தாமோதரதாஸ் தலைமையில்தான் மீண்டும் அமையும் என்று கருத்து தெரிவித்துள்ளார். அதுமட்டுமின்றி கடந்த 1977ஆம் ஆண்டிலிருந்து மத்தியில் யார் தலைமையிலான ஆட்சி அமையும் அல்லது யார் தலைமையிலான கட்சி தோல்வியைத் தழுவும் என்று கங்கை நதியில் படகோட்டுபவர்கள் கணித்துக் கூறுவதன்படியே இதுவரை நடைபெற்றுள்ளது என்றும், அதற்கு காரணம் என்னவென்றும் அந்தக் கட்டுரையில் ஜாவித் லாய்ட் குறிப்பிட்டுள்ளார். இனி அவருடைய கட்டுரையின் சுருக்கம். 

இந்தியாவின் இருபெரும் நதிகளான கங்கை - யமுனை சங்கமிக்கும் இடமான அலகாபாத் தற்போது 'ப்ரயாக் ராஜ்' என்று அதன் தொன்மையான பெயருடன் அழைக்கப்படுகிறது. ஒவ்வொரு ஆண்டும் ஆயிரக்கணக்கில் புனித யாத்ரீகர்கள் வந்து செல்லும் இடம் இது. 

குறிப்பிட்ட சமூகத்தினர் மட்டுமல்லாது அனைத்து சமூகத்தினரும் சங்கமிக்கும் இடம் என்று கூறலாம். இங்குள்ள நதியில் படகு சவாரி செய்ய, அனுபவம் வாய்ந்த படகோட்டிகள் இருப்பர். இவர்கள் 'மல்லாஸ்' என்று அழைக்கப்படுகின்றனர். 

நான் 1977ம் ஆண்டு முதல்முதலாக அப்பகுதிக்குச் சென்றேன். அப்போது அரசியல் ரீதியாக, எனக்கும், கங்கை நதியில் உள்ள  படகோட்டிகளுக்கும்  ஏற்பட்ட பல்வேறு கருத்து மோதல்களுக்கு பிறகு, அந்த ஆண்டின் பொதுத்தேர்தலில் இந்திரா காந்தி தோல்வியடைவார் என படகோட்டிகள் கூறினர். அதன்படியே, இந்திரா தோல்வியை தழுவியதையடுத்து ஜனதா கட்சி ஆட்சிக்கு வந்தது. 

இவ்வாறே அடுத்த 8 தேர்தல்களுக்கும் நான் அவ்விடத்திற்கு சென்று அவர்களுடைய கருத்தை கேட்டறிந்து வருகிறேன்ன். அவர்கள் கூறியபடியே நடந்தது எனக்கு ஆச்சரியத்தை அளித்தது. உண்மையில் சொல்லப்போனால், தேர்தல் முடிவுகளை கணிக்கும் நட்சத்திர பிரபலங்களை விட, அவர்கள் மிகவும் துல்லியமாக கணித்தனர். 

அதேபோல கடந்த 2014ஆம் ஆண்டு பிரதமர் அடல் பிஹாரி வாஜ்பாய் தலைமையிலான தேசிய ஜனநாயக் கூட்டணி மீண்டும் தேர்ந்தெடுக்கப்படாது என்றும் கருத்து தெரிவித்தனர். 2014ம் ஆண்டு தேர்தலில் கண்டிப்பாக பாஜக ஜெயிக்கும் என்று தெளிவாகக் கூறினர். இது தொடர்பாக நான் கொடுத்த கட்டுரை ஹிந்துஸ்தான் டைம்ஸ் பத்திரிக்கையில் வெளிவந்துள்ளது. 

மீண்டும் மோடி: கங்கை நதியில் படகோட்டுபவர்கள் கணிப்பு!

அதேபோன்றும் 2019 தேர்தல் குறித்த அவர்களது கணிப்பை கேட்பதற்காக நான் பிரயாக்ராஜ் சென்றேன். 2019 தேர்தலிலும் மோடி தான் அதிக இடங்களுடன் ஆட்சியை கைப்பற்றுவார் என்று அவர்கள் கூறியுள்ளனர். ஏன் நீங்கள் அனைவரும் மோடிக்கு ஆதரவு தருகிறீர்கள்? என்று கேட்டதற்கு, அவர்கள் 'தனிப்பட்ட நம்பிக்கை தான்' என்று பதில் அளித்துள்ளனர். அவர்களுக்கு, ஒவ்வொரு தொகுதியிலும் பாஜக வேட்பாளர்கள், யார் யார் என்று கூட சரியாக தெரியவில்லை. ஆனால், மோடி தான் மீண்டும் ஆட்சிக்கு வருவார் என ஆணித்தரமாக அடித்துக்கூறுகின்றனர் அந்த கங்கையின் புதல்வர்கள். 

மீண்டும் மோடி: கங்கை நதியில் படகோட்டுபவர்கள் கணிப்பு!

இதற்கு காரணம் என்னவென்று அவர்களிடம் கேட்டால், 'மோடி ஆட்சியில் இந்தியா வளர்ச்சி பெற்றுள்ளது. எனவே அவர் தான் மீண்டும் ஆட்சிக்கு வர வேண்டும்' என்றும் கூறுகின்றனர். 

பிரயாக்ராஜ் மட்டுமின்றி தென் இந்தியாவின் பல்வேறு பகுதிகளுக்கும் நான் சென்றேன். ஆந்திரப்பிரதேச பகுதியில் உள்ள மக்களிடம் கேட்கும் போது, ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸ் கட்சி அதிக இடங்களைப் பெறும் என்றும் சந்திரபாபு நாயுடுவுக்கு கடந்த முறையை விட குறைவான இடங்கள் தான் கிடைக்கும் என்று கூறியுள்ளனர்.

மீண்டும் மோடி: கங்கை நதியில் படகோட்டுபவர்கள் கணிப்பு!

அதேபோன்று பெங்களூரு பகுதிக்குச் சென்ற போது, கர்நாடக மக்கள் பெரும்பாலோனோர் காங்கிரஸுக்கு வாக்களித்ததாக கூறினர். மற்றொருவர் காங்கிரஸ் மற்றும் பாஜக சரிசமமாக தலா 14 இடங்களை பெறும் என்றார். 

தொடர்ந்து தெலங்கானாவில் சந்திரசேகர் ராவ் அதிகபட்சமாக 17 இடங்களில் 10 இடங்களை கண்டிப்பாக பெறுவார் என்று ஒரு பெண்மணி கூறியதை அடுத்து, தமிழகத்தில் யார் வருவார்கள் என்று கணிக்க முடியவில்லை என திருவள்ளூரில் ஒருவர் தெரிவித்தார். 

தென் மாநிலங்களான ஆந்திரா, கர்நாடகா, தமிழ்நாடு, கேரளா தவிர அனைத்து இடங்களிலும் மோடியை மக்கள் ஆதரிக்கின்றனர். எனவே கங்கை நதியில் உள்ள படகோட்டிகளின் கூற்றுப்படி, கண்டிப்பாக மோடி தான் மீண்டும் பிரதமராக வருவார் என்று கூறுகிறேன்.  நாடெங்கிலும் தினமும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் பிரயாக்ராஜுக்கு வந்து வழிபட்டுச் செல்கின்றனர். அப்போது அவர்களுடன் ஏற்படும் உரையாடைலை வைத்து கங்கை நதியின் படகோட்டிகள் நாட்டில் நிலவி வரும் சூழலை அறிந்துகொள்கின்றனர். அதனடிப்படையிலேயே, அவர்கள் யார் வெற்றி பெறுவர் என்பதை துல்லியமாக கணித்து கூற இயலுகிறது என்று கருதுகிறேன் என்றும் அந்த பத்திரிகையாளர் ஜாவித் லாய்க் அவர் எழுதியுள்ள கட்டுரையில் குறிப்பிட்டுள்ளார்.

newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP