காஷ்மீரில் தீவிரவாதி சுட்டுக்கொலை

ஜம்மு-காஷ்மீரில் ராணுவத்தினர் இன்று ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது தீவிரவாதிகள் ராணுவத்தினரை நோக்கி திடீரென துப்பாக்கிச்சூடு நடத்தினர். இதற்குப் பதிலடியாக ராணுவத்தினர் திருப்பிச் சுட்டதில் தீவிரவாதி ஒருவர் உயிரிழந்தார்.
 | 

காஷ்மீரில் தீவிரவாதி சுட்டுக்கொலை

ஜம்மு-காஷ்மீர் மாநிலம், புல்வாமா மாவட்டத்தில் தீவிரவாதி ஒருவரை பாதுகாப்பு படையினர் இன்று சுட்டுக் கொன்றனர். அவர் எந்த இயக்கத்தைச் சேர்ந்தவர் என்பது குறித்து விசாரணை நடைபெற்று வருகிறது.

புல்வாமா மாவட்டம் அவந்திபுரா பகுதியில் பாதுகாப்புப் படையினர் இன்று காலை ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அங்கு மறைந்திருந்த தீவிரவாதிகள் ராணுவத்தினரை நோக்கி திடீரென துப்பாக்கிச்சூடு நடத்தினர். இதற்குப் பதிலடியாக ராணுவத்தினரும் திருப்பிச் சுட்டனர். இந்த மோதலின் இறுதியில் தீவிரவாதி ஒருவர் உயிரிழந்தார். அப்பகுதியில் வேறு ஏதேனும் தீவிரவாதிகள் பதுங்கியுள்ளனரா என்ற சந்தேகத்தின் பேரில் தேடுதல் வேட்டை நீடித்து வருகிறது.

ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தில் இந்த ஓராண்டில் மட்டும் 230க்கும் மேற்பட்ட தீவிரவாதிகளை பாதுகாப்புப் படையினர் சுட்டுக் கொன்றுள்ளனர். இதில், பாகிஸ்தானில் இருந்து ஊடுருவிய தீவிரவாதிகளும் அடங்குவர்.

newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP