மசூத் ஆசார் இங்கதான் இருக்கார் - பாகிஸ்தான் அரசு ஒப்புதல்

ஜெய்ஷ்-ஏ-முகமது இயக்கத் தலைவர் மசூத் ஆசார் பாகிஸ்தானில் தான் உள்ளார் என்று அந்நாட்டு அரசு ஒப்புக் கொண்டுள்ளது. இந்தியாவில் நடத்தப்பட்ட பல்வேறு தீவிரவாதத் தாக்குதல்கள் தொடர்பாக தேடப்படும் நபர் அவர் என்பது குறிப்பிடத்தக்கது.
 | 

மசூத் ஆசார் இங்கதான் இருக்கார் - பாகிஸ்தான் அரசு ஒப்புதல்

ஜெய்ஷ்-ஏ-முகமது இயக்கத் தலைவர் மசூத் ஆசார் பாகிஸ்தானில் தான் உள்ளார் என்று அந்நாட்டு அரசு ஒப்புக் கொண்டுள்ளது. இந்தியாவில் நடத்தப்பட்ட பல்வேறு தீவிரவாதத் தாக்குதல்கள், சமீபத்தில் புல்வாமாவில் நடத்தப்பட்ட தற்கொலைப்படைத் தாக்குதல் உள்ளிட்டவை தொடர்பாக இந்தியாவால் தேடப்படும் நபர் மசூத் ஆசார் என்பது குறிப்பிடத்தக்கது.

சி.என்.என். ஊடகத்துக்கு பாகிஸ்தான் வெளியுறவு அமைச்சர் ஷா முகமது குரேஷி பதில் அளித்தபோது, மசூத் ஆசார் அந்நாட்டில் இருப்பதாகத் தெரிவித்தார். எனினும், வீட்டை விட்டு வெளியே வரமுடியாத அளவுக்கு மசூத் ஆசார் உடல்நலன் குன்றியிருப்பதாகவும் அவர் கூறினார். மேலும், “போர் பதற்றத்தை தணிக்கும் எந்தவொரு நடவடிக்கையையும் பாகிஸ்தான் வரவேற்கிறது. இந்தியாவிடம் உறுதியான ஆதாரம் இருக்குமானால், அதை அவர்கள் ஒப்படைக்கட்டும். அதன் பிறகு, இருதரப்பும் அமர்ந்து பேசி, நல்லதொரு தீர்வை எட்டுவோம்’’ என்றார் அவர்.

newstm.in
 

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP