Logo

வாடகைத்தாய் முறையை வர்த்தக ரீதியில் பின்பற்ற தடை விதிக்கும் மசோதா மக்களவையில் நிறைவேறியது..!

வாடகைத் தாய் முறையை பின்பற்றுவோர் அதை வர்த்தக ரீதியாக பயன்படுத்துவதற்கு தடை விதிக்கும் சட்ட மசோதா மக்களவையில் இன்று ஏகமனதாக நிறைவேற்றப்பட்டது.
 | 

வாடகைத்தாய் முறையை வர்த்தக ரீதியில் பின்பற்ற தடை விதிக்கும் மசோதா மக்களவையில் நிறைவேறியது..!

வாடகைத் தாய் முறையை வர்த்தக ரீதியாக பயன்படுத்துவதற்கு தடை விதிக்கும் சட்ட மசோதா மக்களவையில் இன்று ஏகமனதாக நிறைவேற்றப்பட்டது. 

கடந்த 2016ஆம் ஆண்டு நவம்பர் மாதத்தில் வாடகைத்தாய் முறையை ஒழுங்குபடுத்தும் மசோதா மக்களவையில் அறிமுகம் செய்யப்பட்டது. பின்னர் அதன் மீது 23 திருத்தங்கள் செய்யப்பட்ட நிலையில், இந்த மசோதா  மக்களவையில் இன்று அனைத்துக் கட்சியினராலும் ஏகமனதாக நிறைவேற்றப்பட்டுள்ளது.  அதுமட்டுமின்றி இந்த மசோதா மாநிலங்களவையிலும் நிறைவேற்றப்பட்ட  பின்னரே இது சட்டமாக நடைமுறையில் அமலுக்கு வரும்

இந்த மசோதா பெண்கள் மற்றும் குழந்தைகளின் கண்ணியத்தை பாதுகாக்கும்.

குழந்தை இல்லாத தம்பதிகள் மட்டுமே வாடகைதாய் மூலம் குழந்தை பெற்றுக்கொள்ளலாம்

இந்திய தம்பதிகள் மட்டுமே வாடகைதாய் மூலம் குழந்தை பெற்றுக்காெள்ளலாம். வெளிநாட்டினருக்கு அனுமதி இல்லை

இந்த மசோதாவின் படி ஓரினச்சேர்கையாளர்கள், கணவன் அல்லது மனைவியை இழந்தவர்கள், திருமணம் செய்து கொள்ளாமல் ஒன்றாக வாழ்பவர்கள் வாடகைதாய் முறையை பயன்படுத்த முடியாது.

வாடகைத்தாய் முறையை வர்த்தக ரீதியில் பின்பற்ற, இந்த சட்டம் தடை விதிக்கிறது. 

இந்த மசோதாவின் நோக்கம், குடும்பங்களை காப்பாற்றுவதுதான் என மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் ஜே.பி.நட்டா பேசினார். பின் குரல் வாக்கெடுப்பு மூலம் மசோதா நிறைவேற்றப்பட்டது. 

வாடகைத்தாய் முறையை பயன்படுத்திக்கொள்ளும் பெண்ணுக்கு 23 முதல் 50 வயதுக்குள் இருக்க வேண்டும்.

ஆணுக்கு 26 முதல் 55 வயதுக்குள் இருக்க வேண்டும். திருமணமாகி 5 ஆண்டுகள் கடந்திருக்க வேண்டும். 

தம்பதியரில் ஒருவருக்கு குழந்தை பெற தகுதி இல்லாமல் இருக்க வேண்டும். 

வாடகைத்தாயாக இருப்பவர் அந்த தம்பதிக்கு நெருக்கமான உறவினராக இருக்க வேண்டும். அவரும் திருமணமாகி குழந்தை பெற்றிருக்க வேண்டும். 

வர்த்தக ரீதியில் பணம் கொடுத்து வாடகைத்தாயாக, ஓர் பெண்ணை அமர்த்தக்கூடாது. ஆனால், மருத்துவ செலவு, காப்பீட்டு செலவு போன்றவற்றை அவருக்குக் கொடுக்கலாம்.

newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP