ஜம்மு காஷ்மீரில் சட்டப்பேரவை தேர்தல் - ஆளுநர் முர்மு அறிவிப்பு!!

காஷ்மீர் பிரதேசத்திற்கான சட்டப்பேரவை தேர்தல் மிக விரைவில் நடைபெறும் என்று அறிவிப்பு விடுத்துள்ளார் ஜம்மு காஷ்மீர் பிரதேசத்தின் லெப்டினன்ட் ஆளுநரான கிரிஷ் சந்திர முர்மு.
 | 

ஜம்மு காஷ்மீரில் சட்டப்பேரவை தேர்தல் - ஆளுநர் முர்மு அறிவிப்பு!!

காஷ்மீர் பிரதேசத்திற்கான சட்டப்பேரவை தேர்தல் மிக விரைவில் நடைபெறும் என்று அறிவிப்பு விடுத்துள்ளார் ஜம்மு காஷ்மீர் பிரதேசத்தின் லெப்டினன்ட் ஆளுநரான கிரிஷ் சந்திர முர்மு.

ஜம்மு காஷ்மீரின் சிறப்பு அந்தஸ்தை திரும்ப பெற்று, அதை ஜம்மு காஷ்மீர் மற்றும் லடாக் என்று இரண்டு யூனியன் பிரதேசங்களாக பிரிக்க மத்திய அரசு உத்தரவு பிறப்பித்திருந்ததை தொடர்ந்து, கடந்த அக்டோபர் 31ஆம் தேதியன்று, ஜம்மு காஷ்மீர் பிரதேச ஆளுநராக கிரிஷ் சந்திர முர்மு நியமிக்கப்பட்டார். 

இதை தொடர்ந்து, இன்று இவரது ஆலோசகர்களாக ஒய்வுபெற்ற ஐ.பி.எஸ். அதிகாரியான ஃபரூக் கான் மற்றும் முன்னாள் அதிகாரியான கே.கே. ஷர்மா ஆகிய இருவரும் நியமிக்கப்பட்டுள்ளனர். இவர்கள் இருவரும் முன்னாள் ஆளுநர் சத்யபால் மாலிக்கிற்கும் ஆலோசகர்களாக இருந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. 

இந்நிலையில், இன்று உரையாற்றிய காஷ்மீர் பிரதேச லெப்டினன்ட் ஆளுநரான கிரிஷ் சந்திர முர்மு, ஜம்மு காஷ்மீரில் சட்டப்பேரவை தேர்தல் நடைபெறும் என்றும், அதற்கான தேதிகள் கூடிய விரைவில் அறிவிக்கப்படும் என்றும் கூறியுள்ளார்.

ஜம்மு காஷ்மீர் பிரதேசத்தில், மற்றுமோர் முன்னேற்றமாக, மத்திய அரசு அதன் சிறப்பு அந்தஸ்தை திரும்ப பெறுவதற்கு முன்னரே கட்டுபாடுகள் விதித்து விட்டதாக குற்றம் சாட்டப்பட்டு தாக்கல் செய்யப்பட்டுள்ள மனுக்களை விசாரிப்பதற்கு, வரும் டிசம்பர் 10ஆம் தேதி தான் கடைசி நாள் என்று இன்று அறிவித்துள்ளது உச்ச நீதிமன்றம்.

Newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP